20 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் வசிக்கும் ஒய்யாரக் கட்டிடம்!

top-news
FREE WEBSITE AD

20,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடம் சீனாவின் ஹாங்சோவில் (Hangzhou) அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. '

ரீஜண்ட் இன்டர்நேஷனல்' (Regent International) என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டடம், 206 மீட்டர் மற்றும் 36 முதல் 39 மாடிகளை கொண்டுள்ளது. ஹாங்சோவின் மத்திய வணிகப் பகுதியான கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் (Qianjiang Century City) இந்தக் கட்டடம் அமைந்துள்ளது.




இது முதன்முதலில் ஆறு நட்சத்திர சொகுசு விடுதியாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஒரு பெரிய குடியிருப்பு வளாகமாக மாற்றப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தற்போது இந்த குடியிருப்புகளில் 20,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மேலும், உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டடம் என்று கூறப்படுகிறது.

இந்த கட்டடத்தில் ஃபுட் கோர்ட், நீச்சல் குளங்கள், மளிகை கடைகள், சலூன் மற்றும் கஃபே உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. குடியிருப்பாளர்களுக்கு தேவையான அனைத்தும் அந்த கட்டடத்திலேயே கிடைப்பதால், அவர்கள் அரிதாகவே வெளியே செல்ல வேண்டி உள்ள கட்டிடம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *