மரம் விழுந்து, 17 வாகனங்கள் நொறுங்கியது! ஒருவர் பலி! ஒருவர் படுகாயம்! - Jalan Sultan Ismail, Kuala Lumpur

top-news
FREE WEBSITE AD

இன்று நண்பகல் 2 மணியளவில் தலைநகர் Jalan Sultan Ismail சாலையில் மரம் விழுந்ததில் சாலையில் பயணித்த 17 வாகனங்கள் நொறுங்கியது. மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் 47 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் 26 வயது ஆடவர் படுகாயம் அடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Concorde தங்கும் விடுதியின் முன்புறம் இருந்த குறிப்பிட்ட மரம் monorel இன் தண்டவாளத்திலும் சாலையிலும் விழுந்ததால் monorel  பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

   

Jalan Sultan Ismail சாலையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பாக Kampung Baru , Bukit Bintang செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் துப்புரவு பணியில் சுமார் 30 மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரம் விழுந்து சேதத்திற்குள்ளான வாகனங்களின் விவரங்கள் பின்வருமாறு

1.MERCEDECS WD 9830B

2.PRODUA BEZZA DDH9949

3.MAZDA WCG 3996

4.MYVI WSS 6520

5.SAGA BLM WV4243

6.PRODUA BEZZA TCM 3009

7.VAN TOYOTA VLN 8110

8.TEKSI PROTON PERSONA BHH 4172

9.TEKSI TOYOTA HDB 5390

10.PRODUA AXIA VKQ8110

11.PROTON INSPIRA WVR 3555

12.MAZDA MDD 918

13.PROTON X50 VKD 2820

14.PROTON SAGA BLM SJA 6197

15.MYVI AV CEQ 6002

16.HONDA VTEC AMJ1223

17.TEKSI SAGA HWE 8728


பாதிக்கப்பட்ட தண்டவாளம் சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்படும் என RAPIDRAIL நிறுவனம் தெரிவித்துள்ளது. KL SENTRAL முதல் MEDAN TUANKU வரையிலான monorel சேவை நிறுத்தப்படுவதாகவும் அதற்கு மாற்றாகப் பேருந்து வசதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணம் தொடர்பான விவரங்கள் அறிய RAPIDRAIL முகநூல் அல்லது படவரியை அணுகவும்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *