27 வயதான பொறியியல் பட்டதாரியான கவிவாணன் சுப்ரமணியத்தின் TEA THAMBI!

top-news
FREE WEBSITE AD

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு இளைஞன் கோலாலம்பூர் வீதிகளில் தன்னுடைய சைக்கிளில் நறுமணம் கமழும் தேநீர் விற்று இன்று 5 சிறு கடைகள் மற்றும்  ஒரு கபேக்கு உரிமையாளர் என்றால் அது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றிதானே...அப்படி ஒரு நிகழ்வு கவிவாணன் சுப்ரமணியம் வாழ்வில் நடந்துள்ளது.. 

27 வயதான பொறியியல் பட்டதாரியான கவிவாணன் சுப்ரமணியம் கோலாலம்பூர் தெருக்களில் மசாலா டீ எனும்  சிறிய வியாபாரத்தை ஒரு சைக்கிளோடு தொடங்கியவர்.. இன்று அவரது கடின உழைப்பினால்  கோலாலம்பூர் நகரம் முழுவதிலும் உள்ள தன்னுடைய ஐந்து கடைகளுக்கு சைக்கிளில் சென்று வருகிறார். 

அவர் உருவாக்கிய டீ தம்பி கபே   இன்று ஜலான் துன் பேராக்  பகுதியில் மக்களின் கூட்ட நெரிசல்  மிகுந்த பகுதியில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.. 

நீங்கள் அந்த வழிசெல்லும் பொழுது அவருடைய உருவாக்கத்தில் தனி ருசியுடன் விளங்கும் மசாலா சாயா மற்றும் சூடாக கிடைக்கும் சிறு சிறு உணவுகளையும் ருசிக்க தவற விடாதீர்கள்..இப்பொழுது ப்ரூ காபி மற்றும் இஞ்சி டீ யும் புதிதாக டீ தம்பி கபேயில் கிடைக்கிறது.. 

மேலும் கவிவாணன் விற்கும் சூடான மசாலா டீ மற்றும் சூடான கறி பப் ருசி தனி ரகம் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.. 

டீ தம்பி  தேனீர் ஸ்டால்கள் பங்ஸார்,மஜீத் இந்தியா,ப்ரீக் பில்ட்ஸ்,புக்கிட் பிந்தாங் போன்ற இடங்களில் உள்ளது என்கிறார் கவிவாணன் சுப்ரமணியம்...
தற்பொழுது கூடுதலாக கேட்டரிங் ஆர்டர்களும் தமக்கு கிடைப்பதாகவும் கூறுகிறார்.. 

கோலாலம்பூர் நகரத்தின் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இடம் கிடைப்பது மிக மிக கடினம். அப்படி கிடைத்தாலும் விலை மிக மிக அதிகம்.ஆனால் என்னுடைய கடின உழைப்பு மற்றும் கவனமான திட்டமிடல் காரணமாக அது சாத்தியமானது என்று தன்னுடைய உழைப்பு பற்றி கூறினார்.. 

எங்களிடம் பொதுவான ஒரு சமையலறை உள்ளது அங்கிருந்து தயாரிக்கப்படும் தேநீரை நாங்கள்  வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் முன்பு எல்லாம் சரியாக ருசியாக இருக்கிறதா என்று உறுதி செய்த பின் நான் வாடிக்கையாளருக்கு தருகிறேன். அது தரமாக இருக்கிறது என்று தன் நியாயமான தொழிலை பற்றி பகிர்ந்து கொண்டார். 

லவங்கப்பட்டை ஏலக்காய் இஞ்சி மற்றும் கிராம்பு ஆகியவற்றை சரியான முறையில் கலந்து தயாரிப்பதே  வாடிக்கையாளர்கள் ருசிக்கும் மசாலா சாயாவின் ரகசியம் என்கிறார் கவிவாணன் சுப்ரமணியம்... 

நான் இந்த அளவிற்கு முன்னேறி வருவதற்கு முக்கிய காரணம் என்னுடைய வாடிக்கையாளர்கள். அத்தகைய வாடிக்கையாளர்களே என்னுடைய இத்தகைய வெற்றிக்கு முழு காரணம் என்று தன் வாடிக்கையாளர்கள் பற்றி பெருமையாக கூறுகிறார் கவிவாணன் சுப்ரமணியம்...
அதுமட்டுமல்லாமல் தனது வாடிக்கையாளருக்கு சேவை செய்ய  ஜலான் துன் பேராக்கில் தான் தொடங்கிய கஃபேதான் எனது பெருமையான சாதனை என்றும்,மஜித் இந்தியா பகுதியில் மற்றொரு டீ தம்பி கஃபே உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் பெருமைப்பட கூறுகிறார் கவிவாணன் சுப்ரமணியம். 

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் கடின உழைப்பும் கவனமான திட்டமிடல் இருந்தால் வெற்றியை தன் வசமாக்கலாம் என்று தன் சொந்த அனுபவத்தினை விவரித்தார் டீ தம்பி கபே வின் கவிவாணன் சுப்ரமணியம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *