மெக்காவில் 300 மலேசியப் பயணிகள் ஹஜ் செய்வதில் சிக்கல்!

top-news
FREE WEBSITE AD

மெக்காவில் உள்ள சுமார் 300 மலேசியப் பயணிகள்  ஹஜ் செய்ய முடியாது என்றும், அவர்களுக்குப் புனித யாத்திரையை ஏற்பாடு செய்த உம்ரா சுற்றுலா நிறுவனம் ஹஜ் விசாவிற்கு பதிலாக சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதையும் ஃபோரம் உம்ரா DIY என்ற முகநூல் பக்கத்தின் ஒரு பதிவில், Zhyema Zhyedee  என்பவர் குறிப்பிட்டு இருக்கிறார். பாதிக்கப்பட்ட பயணிகளில் ஒருவரான தன் நண்பர் இந்த தகவலை தன்னிடம் பகிர்ந்து  உதவி கோரியதாக  முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் Zhyema Zhyedee.

ஹஜ் செய்ய அனுமதி உண்டு என்று சுற்றுலா நிறுவனம் தனது நண்பருக்கு உறுதியளித்ததாக Zhyema Zhyedee பதிவிட்டிருக்கிரார். ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், சவூதி அரேபிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தில், பாதிக்கப்பட்ட பயணிகளை வர்களது ஹோட்டல்களில் தங்குமாறு சுற்றுலா நிறுவனம் அறிவுறுத்தி உள்ளதாகவும்  அவரது நண்பர் கூறியதாக Zhyema Zhyedee கூறினார்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெக்காவுக்குப் புறப்படுவதற்கு முன், மலிவான ஹஜ் பேக்கேஜ்களை வழங்கும் நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தான் அந்த நண்பரிடம் அறிவுறுத்தியதாக Zhyema Zhyedee பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா ஏஜென்சி ஒரு தனிநபருக்கு RM 45,000 வசூலித்ததாகவும் விமான நிலையத்தில் ஹஜ் பயணத்திற்கான சுற்றுலா விசா வழங்கப்பட்ட  பொழுதுதான் நண்பர் ஏமாற்றப்பட்டதாகவும் Zhyema Zhyedee தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஹஜ் பயணிகள் லேசியாவுக்குத் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பரிந்துரைத்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *