குழந்தைகள் உட்பட 32 வெளிநாட்டினர் கைது!

top-news

ஜூன் 26,


சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த வெளிநாட்டினர்கள் மீது தேசிய குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் குழந்தைகள் உட்பட 32 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் சபா மாநிலக் குடிநுழைவுத் துறை உதவி இயக்குநர் Tuan Jafri Bin Embok Taha தெரிவித்தார். சபாவின் Tawau மாவட்டத்தில் வெளிநாட்டினர்களின் நடமாட்டம் அதிகரித்ததால் இன்று அதிகாலை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சபா மாநிலக் குடிநுழைவுத் துறை உதவி இயக்குநர் Tuan Jafri Bin Embok Taha தெரிவித்தார்.

90 வெளிநாட்டினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக மலேசியவுக்குள் நுழைந்தது, காலாவதியான விசாவைக் கொண்டிருந்தது, வணிகத்தில் ஈடுபட்டது என சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக 32 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாகச் சபா மாநிலக் குடிநுழைவுத் துறை உதவி இயக்குநர் Tuan Jafri Bin Embok Taha தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் பாக்கிஸ்தான் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து மலேசியாவுக்குச் சட்டவிரோதமாகக் குடிப்பெயர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


Jabatan Imigresen Sabah menahan 32 warga asing termasuk kanak-kanak di Tawau kerana kesalahan tinggal secara haram, visa tamat tempoh dan aktiviti perniagaan tanpa kebenaran. Mereka dipercayai berasal dari Pakistan dan Filipina.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *