பகடிவதையில் ஈடுபட்டதற்காக மாரா கல்லூரியிலிருந்து 5 மாணவர்கள் நீக்கம்
.jpeg)
- Muthu Kumar
- 28 Jun, 2025
ஈப்போ,ஜூன் பொட்டில் 28 -
மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 14 வயது மாணவனை பகடிவதை செய்த அக்கல்லூரியின் ஐந்து மாணவர்கள் உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.இந்த ஐவரும் அந்த மாணவனை உடல் ரீதியில் பகடிவதை செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக, மாரா தலைவர் அஸ்ராஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தில் சமரசம் காணப்படாது. தொட்டால் வெளியேற வேண்டியதுதான்" என்று நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பதிவிட்ட ஒரு முகநூல் பதிவில் அஸ்ராஃப் குறிப்பிட்டார். இரண்டாம் படிவ மாணவன் ஒருவன் பகடிவதை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்றாம் படிவத்தில் படிக்கும் ஐந்து மாணவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை போலீசார் அடையாளம் கண்டிருப்பதாக இதற்கு முன்னர் கூறப்பட்டிருந்து.
மேல்விசாரணைக்கு உதவுவதற்காக அந்த சந்தேகநபர்களையும் தடுத்து வைப்பதற்காக நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்படும் என்று, பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாமுடின் அஹ்மாட் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் சுமார் 40 நிமிடங்களுக்கு, தமது தலை மேல் காலணையை வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுமாறு தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக, பாதிக்கப்பட்ட அம்மாணவன் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளான்.
அக்கல்லூரியின் தங்குமிடத்தில், மூன்றாம் படிவம் படிக்கும் சில மாணவர்களால் தமது கன்னத்தில் அறையப்பட்ட தோடு, வயிற்றில் குத்தப் பட்டதாகவும் தமது புகாரில் அம்மாணவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தின்போது பணியில் இருந்த தங்குமிட பாதுகாவலர் அச்சம்பவத்தைப் பார்த்ததாகவும் பகடிவதைக்கு ஆளான மாணவனை அவர் தமது அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் அஸாமுடின் தெரிவித்தார்.
பின்னர் சிகிச்சைக்காக அம்மாணவன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். கலவரம் புரிந்ததற்கான குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 147இன் கீழ் இச்சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
Lima pelajar MRSM yang membuli pelajar Tingkatan Dua telah dibuang serta-merta. Mangsa dipaksa duduk sambil kepala ditekan dengan kasut dan turut ditampar serta ditendang. Kes disiasat di bawah Seksyen 147 Kanun Keseksaan kerana mencetus rusuhan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *