பகடிவதையில் ஈடுபட்ட 6 மாணவர்கள் MRSM கல்விக்கூடத்திலிருந்து நீக்கம்! - Datuk Dr Asyraf Wajdi Dusuki

- Sangeetha K Loganathan
- 27 Jun, 2025
ஜூன் 27,
திரங்கானுவில் உள்ள MRSM கல்விக்கூடத்தில் 14 வயது சக மாணவரைப் பகடிவதைச் செய்து காயப்படுத்தியதாக நம்பப்படும் 6 மாணவர்களையும் MRSM கல்விக்கூடத்திலிருந்து நீக்கியிருப்பதாக MARA தலைவரான Datuk Dr Asyraf Wajdi Dusuki இன்று உறுதிப்படுத்தினார். சிறப்புக் கல்வித் தலமான MRSM கல்விக்கூடங்களில் பயில்வது எல்லா மாணவர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பாக இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது. அப்ப்டியான வாய்ப்பைப் பெறும் மாணவர்கள் அடிப்படையில் ஒழுக்கமாக இருப்பதை MRSM நிர்வாகன் உறுதி செய்யும் என Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 14 வயது மாணவரின் முதுகு. வயிறு, ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் விலா எலும்பு வரையும் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். நேற்று மாலை 6.48 மணிக்குப் பாதிக்கப்பட்ட மாணவர் பாதுகாவலரிடம் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட MRSM நிர்வாகியிடம் முதலில் பாதிக்கப்பட்ட மாணவரை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கும் முன்னர் பகடிவதையில் ஈடுபட்ட 6 மாணவர்களையும் MRSM கல்விக்கூடத்திலிருந்து நீக்கும்படியும் தாம் உத்தரவிட்டதாக Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.
Enam pelajar MRSM di Terengganu telah dibuang sekolah selepas disyaki membuli rakan berusia 14 tahun hingga cedera. MARA menegaskan MRSM hanya untuk pelajar berdisiplin, dan tindakan tegas diambil demi keselamatan pelajar lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *