பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சாலையோரத்தில் ஆண் குழந்தை!

top-news
FREE WEBSITE AD

கோல சிலாங்கூர், ஜூன் 30-

புக்கிட் ரோத்தான், கம்போங் அப்பி அப்பியிலுள்ள பள்ளிவாசலுக்கு அருகில் சாலையோரத்தில் ஒரு வாரம் கொண்ட ஆண் குழந்தை ஒன்று விட்டுச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்த பிறகு கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.11 மணிக்கு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் புகார் பெறப்பட்டதாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்பி அஸாஹாருடின் தாஜுடின் தெரிவித்தார்.

விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அக்குழந்தையை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பிளாஸ்டிக் பையில் பொதுமக்கள் கண்டுபிடித்தது தெரிய வந்தது.சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2.13 கிலோ எடையிலான அக்குழந்தை நல்ல நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அக்குழந்தை பிறந்து குறைந்தது 1 வாரம் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. குழந்தையின் தொப்புள் கொடியும் நல்ல நிலையில்தான் இருக்கிறது. தற்போது குழந்தை சோதனை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக தஞ்சோங் காராங் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Seorang bayi lelaki berusia seminggu ditemui ditinggalkan dalam beg plastik berhampiran surau di Kampung Api Api, Bukit Rotan. Bayi seberat 2.13kg itu berada dalam keadaan baik dan kini dirawat di Hospital Tanjong Karang untuk pemeriksaan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *