Syed Saddiq விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு! - AGC

top-news

ஜூன் 26,


RM 10 லட்சம் ரிங்கிட் ARMADA பணமோசடி சம்மந்தப்பட்ட வழக்கிலிருந்து மூடா கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான Syed Saddiq Syed Abdul Rahman விடுவிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (AGC) மேல்முறையீடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் Syed Saddiq Syed Abdul Rahmanக்கு முழுமையான விசாரணைக்குப் பின்னர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி இந்த மறுபரிசீலனைக்கான மேல்முறையீட்டைத் தாக்கல் செய்திருப்பதாக AGC தெரிவித்துள்ளது.

ARMADA பணமோசடி சம்மந்தப்பட்ட வழக்கில் கடந்த 2023 நவம்பர் 9இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறையும் 2 பிரம்படியும் RM10 மில்லியன் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் மேலதிகமான ஆதரங்களை அரசு தரப்பினர் வழங்காததாலும் RM 10 லட்சம் ரிங்கிட் ARMADA பணமோசடி சம்மந்தப்பட்ட வழக்கிலிருந்து மூடா கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான Syed Saddiq Syed Abdul Rahman-ஐ விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளித்தது!


Pejabat Peguam Negara (AGC) telah memfailkan rayuan terhadap keputusan membebaskan Syed Saddiq dalam kes penyelewengan dana RM10 juta ARMADA. Mahkamah Rayuan sebelum ini membebaskan beliau kerana kekurangan bukti kukuh daripada pihak pendakwaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *