கோலகுபு பாருவைக் கைப்பற்றியது பக்காத்தான்! 3,869 வாக்குகள் வித்தியாசத்தில் பாங் வெற்றி!
- Shan Siva
- 11 May, 2024
நாடே பரபரப்பாக எதிர்பார்த்த கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவினை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் படி பக்காத்தான் ஹராப்பான்
வேட்பாளர் டிஏபி கட்சியைச் சேர்ந்த பாங்
சாக் தாவோ வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் மொத்தம் 61.5 விழுக்காடு மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது.
பாங், பெரிக்காத்தான் போட்டியாளரான கைருல் அஸ்ஹாரி சாத்தை விட 3,869 வாக்குகள் பெரும்பான்மையில் கோலகுபு பாரு தொகுதியைக் கைப்பற்றினார்.
சுயேட்சையாகப் போட்டியிட்ட இருவரும் தங்கள் வைப்புத்தொகையை இழந்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில வாக்கெடுப்பின் போது, மறைந்த லீ கீ ஹியோங் 4,119 வாக்குகள் அதிகம் பெற்று, கெராக்கனின் ஹென்றி தியோவை தோற்கடித்தார்.
2013 ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியை
எம்.சி.-யிடம் இருந்து கைப்பற்றி தாற்காத்து வருகிறது டி.ஏ.பி என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் பக்காத்தான் ஹரப்பானின்
பாங் சாக் தாவோ 14,000 வாக்குகளும், பெரிக்காத்தானின் கைருல் அஸ்ஹரி சவுத் 10,131 வாக்குகளும் பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களன Nyau Ke
Xin (Ind): 188 வாக்குகளும், ஹபிஸா ஜைனுதீன் (PRM): 152 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனை அடுத்து பக்காத்தான் ஹராப்பானின்
வெற்றிக்கொண்டாட்டம் கோலகுபு பாரு முழுக்க உற்சாகமாய் களை கட்டியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *