மலேசியா - சிங்கப்பூர் உறவு தொடர்ந்து செழிக்கும்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD




மலேசியாவிற்கு வரவிருக்கும் சிங்கப்பூர் புதிய பிரதமராகப் பதவி ஏற்கவிருக்கும் லாரன்ஸ் வோங்கின் கீழ் சிங்கப்பூருடனான உறவை மலேசியா தொடரத் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

மலேசியாவின் தயார்நிலை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வெளிப்படுத்திய நேர்மறையான உணர்வை பிரதிபலிக்கிறது என்று அன்வார் கூறினார்.


மலேசியா செயற்கை நுண்ணறிவு நெக்ஸஸ் 2024 இன் தொடக்கத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் பிரதிநிதியிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றபோது, ​​சிங்கப்பூரின் நம்பிக்கையை லீ தெரிவித்ததாக அன்வார் கூறினார்.

அடுத்த வாரம் லாரன்ஸ் வோங்கிடம் ஆட்சியை ஒப்படைக்கப் போவதாக பிரதமர் லீ  தமக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

மேலும் புதிய தலைமையின் கீழ் நெருக்கமான மலேசியா-சிங்கப்பூர் உறவு தொடர்ந்து செழிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

பிரதமர் லீயின் விருப்பத்தை நான் வரவேற்கிறேன், லாரன்ஸ் தலைமையில் மலேசியா-சிங்கப்பூர் உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்த தயாராக இருக்கிறேன்" என்று அன்வார் கூறினார்.

லீ மற்றும் அவரது மனைவி ஹோ சிங் ஆகியோரை விரைவில் மலேசியாவிற்கு வருமாறு அழைக்கும் வாய்ப்பு கிடைத்ததாக அன்வார் மேலும் கூறினார்.


ஒவ்வொரு சந்திப்பிலும் தங்களின் உரையாடல்கள் எப்போதும் நண்பருக்கும் நண்பருக்கும் இடையிலான அணுகுமுறையில் அமைந்திருக்கும் என்று பெருமிதமாய் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார் அன்வார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *