மோசடியில் ஈடுபட்டதாக மலேசியர் மீது குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

சிங்கப்பூர், ஜூலை 3-

மலேசியாவில் செயல்பட்ட கும்பலுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக மலேசியர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.சோங் வெய் ஹாவோ எனும் அந்த 41 வயது மலேசியர் மீது ஜூலை 1ஆம் தேதி ஏமாற்றுக் குற்றம் சுமத்தப்பட்டது.

மார்ச் 30க்கும் ஏப்ரல் 17க்கும் இடையே அவர் குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூருக்கு மோசடி அழைப்புகளை மேற்கொள்ளும் மலேசியாவின் குளோபல் சிஸ்டம்ஸ் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன் (ஜிஎஸ்எம்) என்ற நிறுவனத்துடன் சேர்ந்து அவர் மோசடியில் ஈடுபட்டதாக ஜூலை 30ஆம் தேதி அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது. ஜூன் 28ஆம் தேதி மலேசியாவில் கைது செய்யப்பட்ட சோங் சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஜிஎஸ்எம் நிறுவனம் சிங்கப்பூரில் மோசடி அழைப்புகளை செய்ய அவர் தொழில்நுட்ப
உதவிகளைச் செய்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சோங் மீதான வழக்கு மீண்டும் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Seorang rakyat Malaysia, Song Wei Hao, didakwa di mahkamah Singapura atas kesalahan penipuan bersama sindiket dari Malaysia. Dia dituduh terlibat dalam panggilan penipuan antara 30 Mac hingga 17 April. Kesnya akan disambung pada 8 Julai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *