அன்னை மங்களம் எனும் மலேசிய அன்னை தெரஸா!

top-news
FREE WEBSITE AD

மலேசியாவின் அன்னை தெரேசா அன்னை மங்களம் அவர்கள். கருணையின் குருவே கடவுள் என்பதை தன் வாழ்வில் வாழ்ந்து நிரூபித்தவர். தனது சிறு வயதிலேயே மகாத்மா காந்தியாரின் போதனைகளில் அதிகமாக ஈர்க்கப்பட்டு மனிதநேயத்தை போற்றி வாழ்ந்தவர் தான் அன்னை மங்களம். நலிந்த மக்களுக்கான அடைக்கலமாக திகழ்ந்தவர் தன் வாழ்வின் மொத்த நாட்களையும் நலிந்த மக்களுக்கு ஆதரவளித்து வாழ்ந்தவர் அன்னை மங்களம்.



சுவாமி விவேகானந்தருக்கு வாய்த்த நிவேதிதியைப் போல தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தை தோற்றுவித்த சத்யானந்தா ஸ்வாமிகளுக்கு வாய்த்தவர் அன்னை மங்களம் என்றும் மலேசிய இந்து சமய ஆன்மீக வரலாற்றில் அன்னை மங்களத்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் மலேசியா அருள்மிகு திருமுருகன் திருவாக்குத் திருவிடத்தின் தலைவர் தவத்திரு பால யோகி சுவாமிகள் புகழரை வழங்கியுள்ளார்.

இத்தனை பெருமைக்குரிய ஒருவர் நாம் வாழ்ந்த சமகாலத்தில் நமக்காக நம்மோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்கிற பொழுது அவரைப் பற்றிய குறிப்புகளை தொகுத்து இந்த கட்டுரை மலர்கிறது.

1926 இல் மே 17 அப்போதைய சிங்கையில் பிறந்து 1977 ஆம் ஆண்டு வரை ஆசிரியராக பணியாற்றியவர் அன்னை மங்களம். தமது 98 வது வயதில் ஜூன் 10 2023 ஆம் ஆண்டு முதுமை காரணமாக இயற்கை எய்தினார். மங்களம் தகப்பனார் பெயர் அய்யாசாமி என்னும் இயற்பெயரை கொண்ட அன்னை மங்களம் நூலாசிரியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





புறப்பாட மேம்பாட்டு மையத்தின் நன்னெறி கல்வி குழு உறுப்பினர், மலேசிய சர்வ சமய மன்றத்தின் உதவித்தலைவர், தேசிய ஒற்றுமை மற்றும் சமூகம் மேம்பாட்டு துறையின் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் தேசிய ஆலோசனை மன்ற உறுப்பினர் என அரசு துறைகளிலும் ஆன்மீக அமைப்புகளிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.
அன்னை மங்களம் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று... தூய வாழ்க்கை சங்கம் குழந்தைகள் இல்லத்தினை நிறுவியது. கைவிடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட அல்லது சிக்கலான பின்னணியில் இருந்து வந்த குழந்தைகளுக்கு இந்த இல்லம் தங்குமிடம், கல்வி, மற்றும் பராமரிப்பு வழங்கியது. இந்த குழந்தைகளை வளர்த்து அவர்களிடம் அன்பு, மற்றும் ஒழுக்க விஷயங்களை ஊட்டுவதில் அன்னை மங்களத்தின் அர்ப்பணிப்பு அவருக்கு பரவலான மரியாதையையும் போற்றுதலையும் பெற்றுத் தந்தது.

மலேசியாவில் தனது பணிக்கு கூடுதலாக அன்னை மங்களம் உலகளாவிய மனிதாபிமான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் பல சர்வதேச மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றார். அமைதிக்கான பல செய்தியை பரப்பி  மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவித்தார்.





அன்னை மங்களம் ஜூன் 10 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு காலமாகியும் நமக்காக அமைதி, அன்பு மற்றும் மக்கள் நலத்தொண்டு ஆகியவற்றுடன் நமக்கான மனித நேயத்தையும் அவர் விட்டுச் சென்றார். அவரின் செயலால் தற்போது அதன் தாக்கம் தொடர்ந்து உணரப்படுகிறது. மேலும் அவரது போதனைகள் மற்றும் மதிப்புகள் மிகவும் இரக்கமுள்ள மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு நல் வழிகாட்டும் ஒளியாகவும் திகழ்கிறது...


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *