மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் ரப்பர் தோட்டம்!
- Muthu Kumar
- 16 Aug, 2024
மலாக்கா, ஆயர் மோலேக், புக்கிட் லிந்தாங் தோட்டம் தான் மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் ரப்பர் தோட்டம். 1895-ஆம் ஆண்டில் இந்த ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது. மலாக்கா நகரில் இருந்து பத்து மைல் தொலைவில் இந்த ரப்பர் தோட்டம் உள்ளது.
அதன் பின் 1897-ஆம் ஆண்டு மலாக்காவில் மற்றொரு ரப்பர் தோட்டம் புக்கிட் அசகானில் உருவாக்கப்பட்டது. இந்தப் புக்கிட் அசகான் தோட்டம் மலேசியாவில் உருவாக்கப்பட்ட மூன்றாவது ரப்பர் தோட்டம்.
1877-ஆம் ஆண்டில், கோலா கங்சாரில் ரப்பர் பயிர் செய்யப் பட்டாலும் அவை எல்லாம் சோதனை அடிப்படையிலேயே நிகழ்ந்தன. புக்கிட் லிந்தாங் தோட்டத்தை உருவாக்கியவர் சான் கூன் செங் (Chan Koon Cheng). மலாக்காவைச் சேர்ந்த சீன வர்த்தகர்.
அந்தக் காலக் கட்டத்தில் மலாக்காவில் புகழ்பெற்று விளங்கிய மற்றொரு சீனர் டான் சாய் யான் (Tan Chay Yan). இவரின் துணையுடன் புக்கிட் லிந்தாங் தோட்டம் உருவானது.
இந்த ரப்பர் தோட்டத்தை உருவாக்குவதற்கு தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் புக்கிட் லிந்தாங் தோட்டத்திற்கும் கொண்டு வரப் பட்டார்கள். தமிழர்களைக் கொண்டு வருவதற்கு மலாயா ஆங்கிலேய அரசாங்கம் உதவி செய்து இருக்கிறது.
1895-ஆம் ஆண்டு 60 ஏக்கர் பரப்பளவில் புக்கிட் லிந்தாங் தோட்டத்தில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது. பின்னர் 1897-ஆம் ஆண்டு, அருகாமையில் இருந்த புக்கிட் டூயோங் தோட்டத்தில் 40 ஏக்கர் ரப்பர் பயிர் செய்யப் பட்டது.இந்த ரப்பர் தோட்டங்களை உருவாக்குவதில் பெரும் பங்கு நம் இந்தியர்களையே சேரும். இந்த ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அப்போதைய மெட்ராஸ் நகரில் இருந்து தமிழர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கொண்டு வரப் பட்டார்கள் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *