பாட்டாளி மக்களுக்காக நான்! திரையுலகிலும் அரசியலிலும் களம் இறங்கும் தங்கர் பச்சான்

top-news
FREE WEBSITE AD


(இஷாந்தினி தமிழரசன் - லாவண்யா ரவிச்சந்திரன்)

( படங்கள்: எம். முருகன் )


சமுக நீதி கொண்ட மாமனிதராகவும் சினிமா கலையுலகில் மாபெரும் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர் என பல்வேறு பரிணாமங்களில் பீடுநடை போட்டுக் கொண்டிருப்பவர் தங்கர் பச்சான்.

அவருடனான ஓர் இனிய சந்திப்பின் தொகுப்பு உங்களுக்காக....  

ஒளிப்பதிவுத்துறையிலிருந்து இயக்குநராகிய கதை என்ன?
திரைப்படத்தை ஒரு கல்வியாகப் பயின்று வந்தவன் நான். திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தேன். 
நான் நினைக்கின்ற செயல்களை  சினிமாவில் செய்ய முடியவில்லை. ஆதலால்தான், ஒளிப்பதிவுத்துறையிலிருந்து இயக்கத்துறைக்கு வந்தேன். சமூகத்தின் சீரழிவுக்குத் துணை போகும் நிலையில் இன்றைய கருத்துகளும் காட்சிகளும் அமைகின்றது. பணத்துக்காக மக்களின் மனதைச் சிதைத்து சம்பாதிக்கும் கூலி ஆளாக விருப்பம் இல்லாத காரணத்தால் ஒளிப்பதிவுத் துறையிலிருந்து வெளியாகினேன். 
நான் இயக்குநராகிய பிறகு, குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் சினிமாவில் நடந்த மாற்றங்களை ஆய்வுப்பூர்வமாகக் காணலாம். தமிழ் அறிவியல், வாழ்வியல், மொழி, பண்பாடு, கலச்சாரம், அரசியல், தமிழ் மண்ணை உள்ளடக்கிய திரைப்படங்கள் அனைத்தும் அதன் பிறகே வந்தது. குறிப்பாக, 'அழகி' திரைப்படமும் பாரதிராஜா இயக்கியத் திரைப்படங்களும் காலத்தைத் தாண்டி நிற்கக்கூடிய படங்களாக என்றும் நிலைத்து நிற்கும்.

தேர்தல் களத்தில் திடீரென்று இறங்குவதற்கான நோக்கம் என்ன?
அரசியல் எவ்வாறு கால் பதித்தேன் என்பது என்றளவு எனக்குத் தெரியாது. கிட்டத்தட்ட ஒளிப்பதிவாளராக இருக்கின்ற காலம் முதல் எனது பேச்சு, இலக்கியம், சிறுகதை, நாவல் மூலம் பேசிக் கொண்டு வரும் ஒரு விஷயமாக அமைகின்றது எனலாம்.  அதோடு, சொல்லத் தோணுது என்ற 50 வார அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ளேன். 
அரசியல் என்பது ஒரு கட்சி சார்பாக எம்பியாகவோ எம்எல்யாகவோ இருப்பது அரசியல் அல்ல. மாறாக, ஒரு கலைஞனாக எனது படைப்பு, எழுத்து, பேச்சின் மூலமாகச் செய்து கொண்டு வருவேன். 
ஆரம்பக் காலங்களில் அரசியல் முழுமையாக ஈடுபட ஆர்வமில்லாமலே இருந்தது. 2004ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய கூட்டணி ஒன்றிலிருந்து நெல்வேலி, பண்ருட்டி தொகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினராகப் போட்டியிடுவதற்கு தொடர்ந்து கேட்டு வந்தனர். எனக்கு விருப்பமில்லை என்று தட்டிக் கழித்து வந்தேன்.
ஒரு நாள் நான் லண்டனில் இருந்தபோது நள்ளிரவில் மருத்துவர் அன்புமணி  ராமதாஸ் என்னை தொடர்புக் கொண்டார். கட்சியைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது சரியான வேட்பாளர்கள் இல்லை என்றும் தேர்தலில் போட்டியிட முடியுமா என்று கட்சி தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
நான் கொடுத்து வரும் குரல்கள் கட்சிக்கு நன்றாகவே தெரிந்தது. சிந்திப்பதற்கு சிறிது நேரம் கேட்டேன். உடனே, “இதுதான் சரியான நேரம். பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. செயலில் இறங்க வேண்டும். அரசியலில் இருந்து கொண்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள்“ என்று அவர் வெளிப்படுத்தினார். 
அதுமட்டுமல்லாமல், கடலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் கடைசி மாவட்டம். வேலை வாய்ப்பு, வறுமை, அதிக குடிசைகள் கொண்ட இடமாகவும் அதிக குடி நோயாளிகள் உருவான, அதிக இளம் விதவைகள் இருக்கின்ற மாவட்டமாக இருந்து வருகின்றது. 
அதோடு, அதிகப்பட்சமான இயற்கை சீற்றங்கள், மணல் சுரண்டல்கள், கனிம வள அழிப்பு, சுற்றுச் சூழல் சீர்கேடு, ரசாயன தொழிற்சாலைகள், என்எல்சி  பிரச்சினைகள் இருக்கின்ற மாவட்டமாகவும் கடலூர் திகழ்கின்றது.
இவ்வளவுப் பிரச்சினைகள் கொண்ட மாவட்டத்தை சினிமாவால் மட்டும் மாற்ற முடியாது. அதனை, அரசியலில் இருந்து சரி செய்யலாம் என்று மருத்துவர் அன்புமணி என்னிடம் சொன்னார். அதன்பிறகே சம்மத்தித்தேன். இப்படித்தான் நான் வேட்பாளரானேன். எல்லாம் ஒருமணி நேரத்தில் எடுத்த முடிவு. ஒரு படப்பிடிப்புக்காக  லண்டன் சென்ற நான்  உடனடியாக கிளம்பி வந்துவிட்டேன்.
என்னுடைய மனைவி, மகன், நுண்ணறிவு காவல்துறை என்று பல பேருக்குத் தொலைகாட்சியின் வழியே இந்தச் செய்தி சென்று சேர்ந்தது.

இவ்வேளையில், பல நடிகர்கள் திடீரென்று புதியக் கட்சிகளைத் திறக்கின்றனர். அதன் காரணம் முதலமைச்சர் பதவியா அல்லது அரசியல் பிரவேசமா?
சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாது என்பது பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து இருந்து வரும் ஒன்றாகும்.  ஆனால், தற்பொழுது பல நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது அரசியல் சேவைக்காக என்று கூற முடியாது. அரசியல்  சேவைக்காக என்று இருந்திலிருந்தால் சிரந்த கருத்து படங்களையே இதுவரையில் மக்களுக்கு வழங்கி இருப்பர். அரசியல் கட்சி தொடங்குவதற்கு நாட்டின் குடிமகன் என்ற உரிமை ஒன்றே போதுமானது. 
நடிகனாக இருந்து 50 நாள்களுக்கு 150 கோடி முதல் 200 கோடி வரை பணம் கிடைக்கின்றது. ஒரு நாளைக்கு 3 அல்லது 4 கோடி சம்பளம் தமிழ் நாட்டு மக்களுடைய  உழைப்பிலிருந்து நடிகர்களுக்குக் கிடைகின்றது. ஆனால், அந்த மக்களுக்குத் தங்களின் படைப்பின் வழி என்ன செய்திருக்கின்றனர்? 
....... ஜெ அரவிந்தன், அருள் கோபாலகிருஷ்ணன், மகேந்திரன் ஆகியோர்  மக்களின் மேன்மைக்காகவும் நாட்டின் வளர்ச்சிகாகவும் படங்களை எடுத்து வந்தவர்கள். இன்னும் சிலர் சினிமாவை வணிகத்திற்காக மட்டுமே எடுத்து வருகின்றனர் என்பதனை நாம்தான் உணர வேண்டும்.
மக்களுக்கு நல்ல, கருத்துள்ள சினிமாவை எடுக்கத் தகுதி இல்லாதவர்கள், அரசியலில் வந்து என்ன செய்யப் போகிறார்கள்? என்ற கேள்வியே என்னுள் எழும்புகிறது என்று தனது ஆதங்கத்தை தங்கர் பச்சன் வெளிப்படுத்தினார்.

இயல்பான மனிதர், எழுத்தாளர், இலக்கியவாதி, நடிகர், ஒளிப்பதிவு, அரசியல்வாதி என்ற தங்கர் பச்சானில் எந்தத் தங்கர் பச்சானை உங்களுக்குப் பிடிக்கும்?
நான், தங்கர் பச்சன் யார் என்று கேட்டால் அது என்னுடைய எழுத்துதான் பதில் சொல்லும். ஆக, எழுத்தாளர் என்ற தங்கர் பச்சானைதான் எனக்கு மிகவும் பிடிக்கும். 


ஜூன் 4ஆம் தேதி நல்ல செய்தியை எதிர்பார்க்கலாமா?
தங்கர் பச்சான் வெற்றி அடைந்து விட்டேன் என்பதுதான் நல்ல செய்தியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இதைவிட நல்ல செய்தி எதும் கிடைக்குமா என்ன?

திரைத்துறை, அரசியலைத் தவிர்த்து, உங்களின் கனவு என்ன?
என்னுடைய கனவு என்பது என்னுடைய  இயற்கை வலமான நிலம் மீட்கப்பட வேண்டும். தற்பொழுது, ரசாயன பயன்பாடினாலும், பூச்சி மருந்துகளாலும் நிலம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிரது. நிலத்தை அழித்தோமானால் அதில் விலையக்கூடிய உனவும் நஞ்சாகத்தான் விளைகின்ரது.
நஞ்சற்ற, இயற்கையான உணவுகளும், நீர்விழித் தளங்கள் மக்களுக்குச் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். அதோடு, வேளாண்மை தொழில் முதன்மை தொழிலாகக் கருதப்பட வேண்டும். 
அதோடு, தமிழர்களின் கலை, கலாச்சாரம் ஆகியவற்றை காக்க வேண்டும் என்பதே என்னுடைய மிகப் பெரிய கவனாக இருக்கிரது என்று அவர் சொன்னார்.

தமிழ்நாட்டில் ஆணவக் கொலையைத் தடுக்க முடியாதா? 
அதற்கு சமூகம்தான் காரணம். சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. காலம் காலமாக அது உருவாக்கப்பட்டுவிட்டது. அதனைப் பற்றி மேலும் ஆராய்ந்தால்தான் அதனைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். 

அரசியலில் ஈடுபட்டாலும் திரையுலகில் மீண்டும் உங்களை எதிர்பார்க்கலாமா?
அரசியலில் வந்தாலும் நான் திரையுலகில் இருந்து கொண்டுதான் இருப்பேன். தற்போது கூட, ஒரு பட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்து சில படங்களும் வெளியாக உள்ளது. ஜூன் 4, 5 வரைக்கும் தான் எனக்கு வேலை. அதற்கு, என்னுடைய திரைப்படங்கள், அரசியல், விவசாயம், குடும்பம் என அனைத்தையும் நான் பார்த்துக் கொள்வேன். திரைப்படம் என்பது கல்வி. அது என்னால் விட முடியாது. 

'பள்ளிக்கூடம் 2' மீண்டும் வெளியீடு காணுமா? 
மலேசியாவில் தயாரிப்பாளர்கள் இருந்தால் நிச்சயம் எடுப்பேன். மலேசியாவில் அதிகமாக பார்க்கப்பட்டது பள்ளிக்கூட்டம் தான். பள்ளிக்கூடம் படம் வெளியாகும் போது நான் மலேசியாவிற்கு வந்திருந்தேன். அப்போது, 141ஆவது நாள் படம் ஓடிக்கொண்டிருந்தது. எந்தப் படமாவது இத்துணை நாள் ஓடுமா என்பது சந்தேகம்தான். 
ஆனால், நான் பள்ளிக்கூடம் படம் நடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக மலேசிய மக்களுக்கு என்னை தெரிந்திருக்காது என்பது எனக்கு வியப்பாக தான் இருக்கிறது. அதைச் சொல்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது. 
நான் இவ்வளவு படம் எடுத்திருந்தாலும், ஒரு நடிகனை மட்டும் மலேசிய மக்கள் வரவேற்பது வியப்பாக தான் இருக்கிறது. பொதுவாக, தமிழ் நாட்டிற்கு வந்தாலும் நடிகர்கள் வீட்டிற்குச் சென்று தான் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். 
இலக்கியவாதி, சிந்தனையாளர்கள், அறிஞர்கள் மொழியியல் வல்லுநர்கள், சமூகத்திற்கு யாரு பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாதது வருத்தமாகத்தன இருக்கிறது.  என்னை போன்ற கலைஞர்களும் தெரிய வேண்டும். 
இதுவே, சினிமா பாடகர்கள் வந்தால் ஆயிரம், இரண்டாயிரம் என்று செலவு செய்து கொண்டு சென்று பார்க்கும் போது, இம்மாதிரியானதை அவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். 

எழுத்தாளர்களும் நடிகர்களாகும் பயணம் தொடருமா? 
இதுவரை நிறைய பேர் வந்திருக்கிறார்கள். அது என்னுடைய ஆசையும் கூட. மலேசியாவில் கூட நன்றாக எழுத்தக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களை யாருக்கும் வெளியே தெரிவதில்லை. 

சினிமாத் துறையில் செய்ய முடியாத சேவைகளை செய்ய அரசியலில் ஈடுபட்ட போது, அரசியலிலும் இதனை செய்ய முடியாத சூழ்நிலை வந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? 
இதற்கு வாய்ப்பு இல்லை. என்னுடைய பாதையைப் பின்பற்றி நிறைய பேர் வர ஆரம்பித்து விட்டார்கள். தங்கர் பச்சானின் படங்கள், சிந்தனைகள், செயல்கள் எப்படி இருக்கும் என்று பின் தொடர நிறைய பேர் தொடங்கிவிட்டார்கள். என்னுடைய படங்களுக்கும் ஒளி பதிவிற்குப் பிறகும் பெரிய மாற்றங்கள் உருவானது. 
அதோடு, கடலூர் பகுதியில் வாக்குகள் கேட்கும் போதும் கூட, “உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன், எனக்கு வாக்களியுங்கள்” என்று வாக்கு கேட்பது போலித்தனம். எனக்கு பாதம் தொடும் அவசியம் கிடையாது. நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால் அது உங்களுக்கு நல்லது என்பது தான் என் கருத்து. அதனால் தமிழ்நாட்டில் 40 வேட்பாளர்களில் கவனிக்கப்பட்டது என்னுடைய பரப்புரைதான். 

கிளி ஜோசியம் என்ன சொன்னது?
அது தற்செயலாக நடந்தது. நாம் ஒவ்வொரு ஊருக்கும் செல்வோம். எங்கு சென்றாலும், அங்கு கோவில் உள்ளது. அங்கு வந்தால் அத்துனை ஓட்டுகளும் உங்களுக்குதான் என்று சொல்வார்கள். சிறுவயதில் பார்த்தது போல, நானும் பார்த்தேன். ஐயனார் வந்துவிட்டார் எனக்கு வெற்றிதான் என்று சொன்னார். 

இப்போது உள்ள தமிழ்நாடு ஆட்சி 2026இல் தொடருமா? 
பிஜேபி தான் மீண்டும் ஆளும். காங்கிரஸ் தலைமையில் நிறைய விஷயங்கள் சரியில்லை. மக்கள் எல்லாரும் சிதறிக் கிடக்கிறார்கள். மோடி வந்த பிறகு இந்தியா வல்லரசு நாடாக தெரிய வந்தது. திமுகாவில் இளைஞர்கள் இல்லை. இப்படிப்பட்ட அரசியல்கள் மக்களுக்குத் தேவையில்லை.  நிறைய மாற்றங்கள் அடிப்படையில் தமிழ்நாடு ஆட்சி மாறலாம். புதிய கட்சிகளும் தோன்றலாம். இருக்கின்ற கட்சிகளும் இல்லாமல் போகலாம். இதற்கு காலம் பதில் சொல்லும்.

பெரியாரின் கொள்கைகள் தோல்வி அடைந்து விட்டதா? 
வெற்றி, தோல்வி என சொல்ல முடியாது. அது ஓர் இயக்கமாக இயங்கி கொண்டிருக்கிறது. 

தேர்தலில் வெற்றிக்குப் பிறகு, உங்களின் முதல் திட்டம்? 
தமிழ்நாட்டை முழுவதுமாக என்னால் எதுவும் செய்ய முடியாது. கடலூர் மாவட்டத்திற்கு எல்லாம் செய்வேன் என்பது உறுதி. பொதுவாகவே, தமிழ்நாட்டில் வசதிகள் இருக்கிறது. 

கடலூர் மாவட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுமா? 
மாவட்டத்திற்கு மட்டும் தனியாக செய்ய முடியாது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்தும் யாரும் இதனை எதிர்பார்ப்பதும் இல்லை. அனைவருக்கும் சமமாக இலவச கல்வி, தரமான கல்வி, சமமான மருத்துவம் என அனைத்தையும் வழங்க வேண்டும். வேளாண்மையில் நஞ்சு இல்லாத உணவுகள் வழங்க வேண்டும். உலகத்தில் சுற்றுச்சூழல் சரியில்லை. நீர் வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கு அதனைத் தீர்க்க வேண்டும். 
இவ்வாறு தங்கர் பச்சான் நேர்காணலின் போது தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *