“தமிழ்ப்பள்ளியே நம் அடையாளம்“ ஒட்டு வில்லைகள் பகிரப்பட்டன!

- Muthu Kumar
- 04 Jul, 2025
அண்மையில் நெகிரி செம்பிலான் ஜெலுபு தொகுதி ம.இ.கா இக்கூட்டத்தினை ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹஜி ஜலாலுதீன் ஹஜி அலியாஸ் தொடக்கி வைத்தார்.தொடர்ந்து, சிறப்பு வருகையாளரான ம.இ.காவின் தேசிய பொருளாளர் சிவகுமார் தமிழ்ப்பள்ளியே நம் அடையாளம்" ஒட்டுவில்லையை அவரது காரில் ஒட்டி சிறப்பு செய்தார்.
இவ்வாறான நடவடிக்கையும் ஊக்குவிப்பும் இந்த ஆண்டு கட்டாயமாக தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பது தமது உளபூர்வமான நம்பிக்கை என்று ஏற்பாட்டுக்குழு தலைவரும் ஜெம்போல் ஆயர் ஈத்தாம் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமாகிய க.மந்தையா அவர்கள் தெரிவித்தார்.
இது நிச்சயம் நிறைவேறவும் செய்யும். இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து "தமிழ்ப்பள்ளியே நம் அடையாளம்" எனும் கருப்பொருளை அறிமுகம் செய்த ஜொகூர் தமிழக் கல்வியாளர் மேம்பாட்டு இயக்கத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.அவருக்கு ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னாடை யும் மாலையும் அணிவித்துக் கௌரவித்தார்.
Program “Sekolah Tamil Identiti Kita” dilancarkan di Jelubu oleh Ahli Parlimen Dato’ Seri Jalaluddin. Sivakumar dan K. Mandaiya hadir sebagai tetamu khas. Usaha ini diharap dapat meningkatkan bilangan murid di sekolah Tamil pada tahun ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *