இஸ்லாமிய மக்கள் போற்றும் "ஜம்ஜம்" தண்ணீர்..

top-news
FREE WEBSITE AD

இஸ்லாமிய மக்களால் புனிதமான ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும்போது, ஜம் ஜம் கிணற்றுக்கு செல்வது வழக்கம். இந்த கிணற்றின் அருமை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஜம் ஜம் கிணற்றின் வரலாறு நபி இஸ்மாயீல் பிறந்த காலத்தில் இருந்தே ஆரம்பமாகியிருக்கிறதாம். அதாவது கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றி இன்று வரையில் தண்ணீரை சுரந்துக்கொண்டு இருக்கிறதாம். 

இப்ராஹிம் நபி அவர்களால் யாரும் இல்லாத பாலைவனத்தில் ஹஜர் மற்றும் அவரது கைக்குழந்தை இஸ்மாயில் தனியாக விட்டுச் செல்லப்பட்டதாகவும், 

இவ்வாறு செய்வதற்கு காரணம் என வினவிய போது, அவர் எந்தவொரு பதிலும் கூறவில்லை என்றும், இறுதியில் இது அல்லாவின் கட்டளையா? எனக் கேட்டப்போது, ஆம் என்று பதிலளித்தப்படி இப்ராஹிம் நபி சென்றுள்ளதாகவும். எங்களை அல்லா காப்பாற்றுவார் என ஹஜர் கூறியுள்ளார். 

சிறுது நேரத்தில் அவருடைய கைக் குழந்தையான இஸ்மாயில் கடும் வெப்பம் காரணமாக அழ ஆரம்பித்துள்ளது. 

எனவே ஹஜர் ஸபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே ஏழு முறை தண்ணீரைத் தேடி ஓடினார்களாம். எவ்விடத்திலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் எனவே குழந்தையின் அழுக்குரல் கேட்டு குழந்தையிடமே சென்றுள்ளனர். 

தண்ணீர் தாகத்தில் அழுந்துக்கொண்டிருந்த குழந்தை, கால்களை பூமியில் உதைத்தப்படி அழுதுள்ளது. 

அந்தத் தருணத்தில் தான் அவர்களின் கால்களுக்கு அடியிலிருந்து தண்ணீர் வர ஆரம்பித்தது. 

இதை பார்த்த பின்னர் தான் ஹாஜர் அல்லாஹ்வுக்கு நன்றி கூறியபடி, அந்த ஊற்றை பார்த்து ஜம் ஜம் என்று கூறியுள்ளார். 

ஜம் ஜம் என்றால் போதும் போதும் என்று அர்த்தம். அதற்கு பின் தண்ணீர் வெளியில் செல்லாமல் இருப்பதற்கு கற்களை எடுத்து ஒரு கிணறு போல கட்டினார்.

ஹாஜர் அப்போது தண்ணீரை தடுத்து கட்டாமல் இருந்திருந்தால், அந்த தண்ணீரானது மறுநாள் உலகம் முழுவதும் ஓடக்கூடிய ஆறாக மாறியிருக்கும் என ஒரு நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. நபிமொழியில் தான் இந்த தண்ணீரின் சிறப்பு மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. 

பொதுவாகவே நீர் என்பது தாகம் தீர்ப்பதற்கு பயன்படுத்தப்படும். ஆனால் இந்த ஜம் ஜம் நீர் பசியைப் போக்கும், நோயைக் குணப்படுத்தும்; பிரார்த்தனையின் நல்ல பலனை வழங்கும். 

ஜம்ஜம் கிணறு ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை செல்பவர்களுக்கு தண்ணீர் வழங்கி வருகிறது. 

மேலும் தற்போது ஹஜ் யாத்திரை செல்பவர்கள் தங்களது குடும்பத்தினர்களுக்காக ஜம் ஜம் கிணற்றின் தண்ணீரை கொண்டு வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *