25 அடி உயரத்திலிருந்து விழுந்தவர் உயிருடன் மீட்பு!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூலை 2: இன்று அதிகாலை போர்ட் கிள்ளான் தெலோக் காங்கில் ஒரு லாரியுடன் தனது கார் மோதியதில், வாகனமோட்டி 25 அடி உயரத்தில் இருந்து சதுப்பு நில பகுதியில் விழுந்து, அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

40 வயதான சம்பந்தப்பட்ட ஆடவருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் கார் 25 அடி உயர (7.62 மீ) பாலத்தில் லாரியை பின்னால் மோதி, ஒரு சதுப்பு நிலப் பகுதியில் விழுந்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அதிகாலை 2.14 மணிக்கு அவசர அழைப்பு வந்த பிறகு, புலாவ் இண்டா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

சம்பவம் நடந்த நேரத்தில் வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.

அதிகாலை 4.12 மணிக்கு மீட்கப்பட்ட பாதிக்கப்பட்டவர், மேலதிக நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக முக்லிஸ் கூறினார்.

Seorang lelaki cedera ringan selepas keretanya melanggar lori dan terjatuh dari jambatan setinggi 25 kaki ke kawasan paya di Telok Gong, Pelabuhan Klang. Pemandu dipercayai mabuk dan telah diselamatkan oleh pasukan bomba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *