மக்களை நேரடியாகச் சந்திக்க அரசியல்வாதிகளுக்குப் பிரதமர் வலியுறுத்து!
.jpg)
- Sangeetha K Loganathan
- 26 Jun, 2025
ஜூன் 26,
மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் மக்களை நேரடியாகச் சந்திக்க தயங்க கூடாது என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார். நான் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும் என்பதாகவும் தாம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை தொழுகையின் போதும் மக்களைச் சந்திப்பதாகவும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். மக்கள் உங்களை நம்பி தேர்தலில் வெற்றிப் பெற செய்திருக்கிறார்கள் பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் குறைகளை அரசியல்வாதிகள் காது கொடுத்து கேட்பதில்லை என குறைப்பட்டுக்கொள்வதாக Datuk Seri Anwar Ibrahim வருத்தத்துடன் தெரிவித்தார்.
தேர்தலின் போது மட்டும் வீதி வீதியாக நடப்பதும் வீட்டுக்குள் சென்று நலம் விசாரிப்பதும் குழந்தைகளைக் கட்டியணைப்பதுமாக இருந்துவிட்டு தேர்தலுக்குப் பின்னர் அதே மக்கள் அந்த அரசியல் தலைவரைச் சந்திக்க முடியாமல் தவிப்பதாகவும் இது அநாகரிகமானது என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். அரசியல்வாதிகளின் அணுகுமுறைகளை நாம் மாற்ற வேண்டும். முக்கிய பிரச்சனைகளை அடையாளம் காண அரசியல்வாதிகள் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டும் என Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார்.
Perdana Menteri Anwar Ibrahim menegaskan agar ahli politik tidak takut bertemu rakyat secara langsung. Beliau menasihati semua wakil rakyat turun padang sekurang-kurangnya seminggu sekali bagi memahami isu sebenar rakyat dan mengubah sikap angkuh pasca pilihan raya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *