வேப் மின்னியல் சிகரெட் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது!

- Muthu Kumar
- 27 Jun, 2025
(நாகேந்திரன் வேலாயுதம்)
பூச்சோங், ஜூன் 27-
இன்று இந்திய இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் அதிகரித்து உள்ளது என மலேசிய இந்திய குற்றத் தடுப்பு இயக்கத் தலைவர் டத்தோ இக்னிசியஸ் லூர்துசாமி கூறினார்.வேப் எனும் மின்னியல் சிகரெட் புழக்கத்திலும் போதைப் பொருள் புழக்கம் ஊடுருவியுள்ளது என்று வெளியாகிய தகவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம், அரசியல் தலைவர்கள், சமூகம் அனைவரும் பொறுப்பாளிகள் என குறிப்பிட்ட அவர், இதில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி வலியுறுத்தினார்.
பெற்றோர்கள் பிள்ளைகளைக் கண்காணிப்பது அவசியம் என்றும், சமூகம் இப்பிரச்சினையைக் கடமையுணர்ச்சியுடன் கண்டு கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், இவ்விவகாரத்தில் காவல் துறை, சுங்கத்துறை ஆகிய தரப்புகள் போதைப் பொருள் கடத்தல்களை முற்றாக துடைத்தொழிக்க வேண்டும் என்றார்."சட்டப் பிரதிநிதிகள் தீவிரமாகச் செயல்படுதல் அவசியம் என்றும், இது தனிப்பட்ட மனிதனின் பிரச்சினையல்ல, இது நாட்டின் நிலைத்தன்மைக்கு ஆபத்து மட்டுமல்ல, பாதுகாப்புக்கு பெரும் மிரட்டல் என இக்னிசியஸ் எச்சரித்தார்.
போதைப்பொருள் இனம் பார்க்காது என்றும்,பாலினம் பார்க்காது, அது அனைவரையும் அழிக்கும் சக்தி வாய்ந்தது என்றும், ஹிரோஷிமா அணுகுண்டைவிட சக்தி வாய்ந்தது என குறிப்பிட்டார்.கறையான்போல அமைதியாக இருந்து, வேலையைக் காட்டிவிடும் என சுட்டிக்காட்டிய அவர், இது வெடிக்காது ஆனால் சிக்கியவர்கள் அது கொடுக்கும் வலியில் வாழ்நாள் முழுவதும் வலியைத் தாங்க வேண்டும்.
நாடு என்பது என்ன? தனிமனிதனா? இல்லை. அது குடும்பம். குடும்பம்சீர்குலைந்தால் அதன் ஆணிவேரில்சீழ்பிடித்துவிடும்.இந்த இளைஞர்களின் கையில் நாடு இருக்கிறது. உன் கையில் அவர்களின் பாதுகாப்பு இருக்கிறது என்றும், இதில் ஒன்றைத் தவற விட்டாலும் நாம் இந்த நாட்டின் பாதுகாப்பைத் தவறவிட்ட குற்றவாளிகளாகிவிடுவோம்.
இளைஞர்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், மையங்களில், உயர் கல்விக் கூடங்களில், பள்ளிச் சாலைகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முடுக்கி விடுங்கள். அதனை ஒரு நிகழ்ச்சியாகக் கருதாமல் நாட்டுக்காகச் செய்யும் தேசியச் சேவையாகக் கருதுங்கள். படம் பிடித்து, பத்திரிகையில் பதிவுச் செய்தியாக நிகழ்த்த வேண்டாம். செய்வன திருந்தச் செய்யுங்கள். அனைத்து இயக்கங்களையும் ஒன்று திரட்டி என்ன செய்யவேண்டும் என்ற வழி காட்டியை எடுத்துச்சொல்லி அவர்களை இயங்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டால் நாட்டுக்கு அச்சுறுத்தல் வராது. போதைப்பித்தர்கள் நம்மைச் சுற்றி எங்கும் எந்த இலாகாவிலும் இருப்பார்கள். அவர்களைக் காப்பாற்றினால் நாமும் காப்பாற்றப்படுவோம்.
Penggunaan dadah dan vape dalam kalangan belia India kian membimbangkan. Datuk Ignatius Lourdesamy menyeru kerajaan, masyarakat dan ibu bapa bertindak segera. Beliau menekankan kesan merosakkan dadah dan pentingnya kempen kesedaran berterusan demi keselamatan negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *