புத்ரா ஹைட்ஸ் வெடிப்புக்கு மண் நகர்வும் காரணமா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 8-

புத்ரா ஹைட்ஸில் எரிவாயுக் குழாய் வெடிப்பு ஏற்பட்டதற்கு மண் நகர்வும் இதர காரணமாக இருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் உசேன் கூறியுள்ளார். வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் மண் நகர்வு ஏற்பட்டிருக்கின்றதா என்பது குறித்த இதர அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று. ரஸாருடின் கூறியதாக  தெரிவிக்கப்பட்டது

"அது மனித நடவடிக்கைகளினால் ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர். எனினும், நிலத்திற்கடியில் மண் நகர்வு ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியமும் இருக்கிறது. "நீர் ஓட்டத்தின் அதிக அழுத்தமும் இதர பல்வேறு அம்சங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம்" என்று புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹர்மோனியில் அமைக்கப்பட்டுள்ள சம்பவக் கட்டுப்பாட்டு அறையில் நேற்று திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது ரஸாருடின் குறிப்பிட்டார்.

தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகா மற்றும் தடவியல் குழு போன்ற 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, தனது விசாரணையின் ஓர் அங்கமாக ஜொகூர், சிகாமாட்டில் உள்ள பெட்ரோனாஸின் பிரதான கட்டுப்பாட்டு மையத்திற்கு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகா, தனது தொழில்நுட்ப விசாரணையாளர்களை அனுப்பி வைத்திருக்கிறது.

Pihak polis menyiasat kemungkinan tanah runtuh menjadi punca letupan paip gas di Putra Heights. Ketua Polis Negara nyatakan pelbagai faktor seperti tekanan air bawah tanah turut disiasat oleh lebih 10 agensi, termasuk pasukan forensik dan bomba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *