கிள்ளான் பள்ளத்தாக்கு உட்ப ஏழு இடங்களில் நீர்த் தடை!

top-news
FREE WEBSITE AD


 கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சிலாங்கூர் முழுவதும் ஏழு இடங்களில் ஜூன் 5 ஆம் தேதி தற்காலிக நீர் விநியோகத்தில் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயர் சிலாங்கூர் பராமரிப்பு மற்றும் மாற்றுப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக ஆயர் சிலாங்கூர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், ஹுலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய பகுதிகளில்  இந்தத் தடை ஏற்படும்.

இது ஜூன் 5, (புதன்கிழமை) காலை 9 மணி முதல் திட்டமிடப்பட்ட தற்காலிக நீர் விநியோகத் தடையை ஏற்படுத்தும்" என்று அது கூறியது.

அன்றைய தினம் இரவு 7 மணிக்குள் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து, வியாழக்கிழமை (ஜூன் 6) அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி படிப்படியாக தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20% நீர் விநியோகம் வியாழக்கிழமை (ஜூன் 6) பிற்பகல் 3 மணிக்கும், 90% ஜூன் 7 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும் மீட்டமைக்கப்படும், நள்ளிரவில் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக மீட்டமைக்கப்படும்.

மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள்  போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்கள் வழி நீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

மேலும் தகவலை Air Selangor செயலி, அதன் சமூக ஊடக தளங்கள், அதன் ஹாட்லைன் 15300 இல் காணலாம் அல்லது www.airselangor.com ஐப் பார்வையிடவும்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *