ஒன்பது மாத பெண் சிசு கொலை- தந்தைக்கு 30 ஆண்டுகள் சிறை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 28-

தன்னுடைய ஒன்பது மாத பெண்குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் அரசு ஊழியர் ஒருவருக்கு கூட்டரசு நீதிமன்றம் நேற்று முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

மலாயாத் தலைமை நீதிபதி ஹஸ்னா ஹஷிம் தலைமையில் சபாவின் கோத்தா கினாபாலுவில் கூடிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அத்தண்டனையை விதித்தது. மைடின் இப்னுஹஷிம் எனும் அந்நபர் தன்னுடைய குழந்தைக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதன் விளைவாக கடந்த 2018ஆம் ஆண்டில் அக்குழந்தை இறந்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டில் நூருல் ஷாபிகா என்ற தனது குழந்தையை லாபுவானில் உள்ள தனது வாடகை வீட்டில் கொலை செய்ததாக மைடின் (வயது 60) மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆயினும், 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற விசாரணையின்போது அந்நபர் மீதான குற்றம் மரணவிளைவிப்புக் குற்றச்சாட்டாக மாற்றப்பட்டு பதினெட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயினும், அரசுத் தரப்பினர் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து மைடினுக்கு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக கூட்டரசு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. மைடின் தன்னுடைய குழந்தையை பல்வேறு வகையில்
துன்புறுத்தியுள்ளான். ரைஸ் குக்கரிலிருந்து சுடுநீரை குழந்தையின் காலிலும் கைகளிலும் ஊற்றியுள்ளான். அக்குழந்தை அழும் நேரத்தில் எல்லாம் அவளைத் தொட்டியில் போட்டு முரட்டுத்தனமாக ஆட்டி அவளுக்குக் காயத்தை ஏற்படுத்தியுள்ளான்.

Bekas penjawat awam dijatuhi hukuman penjara 30 tahun kerana mendera dan membunuh bayi perempuan sembilan bulan pada 2018. Mahkamah mendapati dia menyiram air panas dan mencederakan mangsa dengan kejam, menyebabkan kematian di rumah sewanya di Labuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *