வெள்ள பாதிப்பிற்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்! – YB Preakas Sampunathan வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 29 Jun, 2025
ஜூன் 29,
சிலாங்கூரில் ஏற்படும் தொடர் வெள்ளத்தால் அதிகமானக் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதை உணர்ந்து மாநில அரசும் நகராண்மைக் கழகமும் விரைந்து ஒரு தீர்வைக் காண வேண்டும் என KOTA KEMUNING சட்டமன்ற உறுப்பினர் Preakas Sampunathan வலியுறுத்தினார். Taman Sri Muda, Desa Kemuning, Bukit Kemuning, Taman Lanchong Jaya, Taman Greenville, Kampung Bukit Lanchong ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருவதாகவும் சம்மந்தப்பட்ட பகுதிகளின் பராமரிப்பு அம்சங்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என Preakas Sampunathan கேட்டுக்கொண்டார்.
நீர் வடிகால்களைப் பராமரிக்க முக்கிய திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டுமென Preakas Sampunathan நகராண்மைக் கழகங்களை வலியுறுத்தினார். வெள்ளத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கிட போதுமான நிதியை அரசாங்கம் ஒதுக்கும்படியும் அவர் வலியுறுத்தினார். கடந்த 20 ஜூன் கோத்தா கெமுனிங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 32 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டதை அவர் நினைவூட்டினார். இது மாதிரியானப் பேரிடர்களை முன்னமே தவிர்க்க வேண்டும் என்றும் பாதிகப்பட்டவர்களுக்கு உடனடியாக வெள்ள நிவாரணப் பொருள்களும் உதவி நிதிகளையும் வழங்க மாநில மத்திய அரசு முன்வர வேண்டும் என KOTA KEMUNING சட்டமன்ற உறுப்பினர் Preakas Sampunathan வலியுறுத்தினார்.
YB Preakas Sampunathan menggesa kerajaan negeri dan pihak berkuasa tempatan segera bertindak menangani masalah banjir berulang di kawasan Kota Kemuning. Sistem saliran perlu diselenggara, pelan mitigasi dilaksana segera, dan bantuan kewangan disalur kepada mangsa banjir.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *