பேருந்து விபத்தில் இருவர் பலி! 16 பயணிகள் படுகாயம்!

top-news

ஜுலை 3,


வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த விரைவுப் பேருந்து இரு லாரிகளை மோதி விபத்துக்குள்ளானதில் இரு பயணிகள் உயிரிழந்ததுடன் 16 பயணிகள் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.44 மணிக்கு ஜொகூரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து பத்து பஹாட அருகில் TRELER லாரியையும் TANKER லாரியையும் மோதி விபத்துக்குள்ளானதாக AYER HITAM மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Md Isa Masngun தெரிவித்தார். 

பேருந்தில் 2 ஓட்டுநர்கள் உட்பட 46 பயணிகள் இருந்ததாகவும் 43 வயது 44 வயதுள்ள இரு பயணிகள் விபத்தில் பலியானதாகவும் 14 ஆண் பயணிகளும் ஒரு பெண் பயணி உட்பட பேருந்து ஓட்டுநர் என 16 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் 2 பேருந்து ஓட்டுநர்களும் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் விபத்துக்கான காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட 16 பயணிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் AYER HITAM மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Md Isa Masngun தெரிவித்தார்.


Sebuah bas ekspres hilang kawalan dan merempuh dua lori di Lebuhraya Utara-Selatan berhampiran Ayer Hitam, menyebabkan dua penumpang maut manakala 16 lagi termasuk pemandu cedera. 46 penumpang berada dalam bas ketika kejadian tengah malam itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *