சுற்றுலா படகு கவிழ்ந்ததில் ஆடவர் உட்பட 2 சிறுமிகள் கடலில் மூழ்கி பலி! 9 பேர் காயம்!

- Sangeetha K Loganathan
- 29 Jun, 2025
ஜூன் 29,
பினாங்கு எல்லை பகுதியில் உள்ள Pulau Perhentian தீவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் உயிரிழந்ததுடன் 2 சிறுமிகளும் கடலில் மூழ்கி இறந்ததாக Besut, மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad Abu தெரிவித்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு 16 சுற்றுலா பயணிகளுடன் கடல் பகுதிகளில் சுற்றுலா மேற்கொண்டிருந்த போது கனமழையின் காரணமாகப் படகு கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் படகில் இருந்தவர்களில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் 9 பேர் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Besut, மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad Abu தெரிவித்தார்.
இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் 40 வயதுடைய Arumugam Sativelo அவரின் 3 வயது மகள் Sarrvihka, மேலும் 10 வயது Vennpani Vijeya Raj எனும் சிறுமி என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இரவு 11.30 மணிக்கு அவர்களின் உடலை மீட்புப் படையினர் மீட்டதாகவும் Besut, மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad Abu தெரிவித்தார். இன்று நண்பகல் 1 மணி வரையில் பாதிகப்பட்ட ஆடவர் ஒருவர் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்த படகு விபத்திற்கான முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பெசூட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் அவர்களிடமும் விசாரணையை மேற்கொள்வதாக Besut, மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad Abu தெரிவித்தார்.
Sebuah bot pelancong terbalik di Pulau Perhentian akibat hujan lebat, mengorbankan seorang lelaki dan dua kanak-kanak perempuan. Sembilan lagi mangsa dirawat di hospital akibat lemas. Polis Besut mengesahkan siasatan penuh insiden sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *