பிறந்த நாளில் தனது மகன்களை சந்தித்த நடிகர் ரவி மோகன்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அவர் சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெயம் ரவி என்றுதான் தமிழ் சினிமா ரசிகர்களால், சினிமா துறையினரால் அழைக்கப்பட்டார்.
இனிமேல் என் பெயர் ஜெயம் ரவி அல்ல. ரவி மோகன் என்று அழைக்குமாறு ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாக ரவி மோகன் நடித்த பல படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக அவரது நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அகிலன், இறைவன், சைரன், 108, காதலிக்க நேரமில்லை, பிரதர் போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இப்போது அவர் ஜீனி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அடுத்ததாக கராத்தே பாபு என்ற படத்திலும் ரவி மோகன் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் ரவி மோகன் நடித்து வருகிறார். அத்துடன் நடிகர் யோகி பாபு நடிக்கும் ஒரு படத்தையும் ரவி மோகன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என தயாரிப்பு நிறுவனம் புதியதாக துவங்கியுள்ள நடிகர் ரவி மோகன், தனது தயாரிப்பில் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.
தனது காதல் மனைவி ஆர்த்தி மற்றும் தனது 2 பிள்ளைகளையும் பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக நட்பில் இருப்பது சமீபத்தில் பெரிய அளவில் பரபரப்பை சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ரவி மோகன் தொடர்ந்த விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில், மனைவி மற்றும் தனது 2 பிள்ளைகளை விட்டு பிரிந்து மும்பையில் வாடகை வீட்டில் நடிகர் ரவி மோகன் இருந்து வருகிறார். இதற்கிடையே நடிகர் ரவி மோகனின் மூத்த மகன் ஆரவ் பிறந்தநாள் வந்தது. இதற்காக சமீபத்தில் தனது மகன்கள் ஆரவ் மற்றும் அயான் ஆகிய இருவரையும் நடிகர் ரவி மோகன் நேரில் சந்தித்து பேசி மகிழ்திருக்கிறார்.

தனது மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரது மனைவி ஆர்த்தி வெளியிட்ட பதிவு ஒன்றில், ஜாக்கிரதை சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பு போல தோன்றலாம் என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார். தனது கணவர் குறித்து அவர் இப்படி விமர்சித்திருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *