நாளை முதல் வெப்பநிலை 35 டிகிரியாக அதிகரிக்கும்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 27 Jun, 2025
ஜூன் 27,
நாளை முதல் ஜூலை 1 வரையில் வெப்பமான வானிலையால் 35 டிகிரி வரையில் வெப்ப அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வெப்ப அளவீட்டால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் வெளிபுற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளும்படியும் பொதுமக்களுக்கு MET MALAYSIA வலியுறுத்தியது. வானிலை மாற்றங்களால் இந்த வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வெப்ப அளவீடுகளை www.met.gov.my வலைத்தலத்தில் பகிரப்படும் என MET MALAYSIA நினைவூட்டியுள்ளது.
வெப்பநிலை மாறுபாட்டால் பெய்யும் மழையும் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் பெய்யும் மழையிலிருந்தும் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும் MET MALAYSIA அறிவுறுத்தியது. இந்த வெப்ப நிலை ஜூலை 1 வரையில் நீடிக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதுவரையில் வெளிபுற நடவடிக்கைகளை ஈடுபடுவதைத் தவிர்க்கும்படியும் வழக்கத்தை விடவும் அதிகமான நீரை அருந்தும்படியும் பொதுமக்களுக்கு தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது.
MET Malaysia memberi amaran cuaca panas bermula esok hingga 1 Julai dengan suhu mencecah 35°C. Orang awam dinasihatkan kurangkan aktiviti luar, minum air mencukupi, dan ikuti maklumat terkini menerusi laman rasmi agensi berkenaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *