மாட்டுச் சாணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ போதைப்பொருள்!

- Sangeetha K Loganathan
- 04 Jul, 2025
ஜூலை 4,
கிளாந்தானில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் RM 5 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குநர் Datuk Mat Zani Mohd Salahuddin தெரிவித்தார். கிளாந்தானின் தும்பட் பாசீர் மாஸ் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட 6 உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடமிருந்து போதைப்பொருள்கள் உட்பட தங்க நகைகளையும் கைப்பைகளையும் சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதா BUKIT AMAN போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குநர் Datuk Mat Zani Mohd Salahuddin தெரிவித்தார்.
கால்நடைகள் வளர்க்கும் தலமாகச் செயல்பட்டு வந்த இரு தலங்களும் போதைப்பொருள்களைப் பதுக்கி வைக்கும் தலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் 25 முதல் 39 வயதினர் என்றும் மாட்டுச் சாணிகளுக்கு அடியில் போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்ததாகவும் BUKIT AMAN போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குநர் Datuk Mat Zani Mohd Salahuddin தெரிவித்தார். இச்சோதனையின் மூலமாக மொத்தம் 35.4 கிலோ எடையிலானப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM 5 மில்லியன் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு சுமார் RM 11 லட்சம் என்றும் கணக்கிடப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிப்பதாக BUKIT AMAN போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குநர் Datuk Mat Zani Mohd Salahuddin தெரிவித்தார்.
JSJN Bukit Aman menahan enam suspek termasuk seorang wanita di Kelantan selepas menemui 35.4 kilogram dadah bernilai RM5 juta yang disembunyikan di bawah najis lembu. Polis turut merampas barang kemas, beg tangan dan kenderaan mewah untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *