சுகாதாரமற்ற இறைச்சி கடைகளை உடனடியாக மூடிய DBKL!

- Sangeetha K Loganathan
- 30 Jun, 2025
ஜூன் 30,
தலைநகரின் பிரபல இறைச்சி வணிகத்தலங்களில் கோலாலம்பூர் நகராண்மைக்கழகமான DBKL நடத்திய சோதனையில் 4 இறைச்சி வணிகத்தலங்கள் மூடப்பட்டுள்ளது. CHERAS , கோலாலம்பூர் சுற்று வட்டாரத்தில் உள்ள 7 இறைச்சி வணிகக் கடைகளில் இச்சோதனையை மேற்கொள்ளப்பட்டதாகவும் கோலாலம்பூர் சுகாதாரத் துறை அதிகாரிகளும் தேசிய வாழ்க்கை செலவீனத் துறை அதிகாரிகளும் இச்சோதனையில் ஈடுபட்டதாக கோலாலம்பூர் நகராண்மைக்கழக உதவி இயக்குநர் Dr. Nor Halizam bt Ismail தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 4 இறைச்சி வணிகத்தலங்களை உடனடியாக மூடப்பட்டதாகவும் 8 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் Dr. Nor Halizam bt Ismail தெரிவித்தார். சம்மந்தப்பட்ட இறைச்சி வளாகங்கள் தூய்மையற்று இயங்குவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார் பெற்றதன் அடிப்படையில் இச்சோதனையை மேற்கொண்டதாக Dr. Nor Halizam bt Ismail தெரிவித்தார். சம்மந்தப்பட்ட இறைச்சி வளாகங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைக்காக 10 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக்கழக உதவி இயக்குநர் Dr. Nor Halizam bt Ismail தெரிவித்தார்.
DBKL menutup serta-merta empat premis jualan daging di Cheras kerana beroperasi dalam keadaan tidak bersih. Pemeriksaan mendapati tujuh premis diperiksa, lapan saman dikeluarkan dan 10 individu ditahan untuk siasatan lanjut, kata Dr. Nor Halizam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *