வளர்ப்பு மகனைக் கொடூரமாகத் தாக்கிய தாயிற்கு 8 ஆண்டுகள் சிறை!

- Sangeetha K Loganathan
- 05 Jul, 2025
ஜூலை 4,
வளர்ப்பு மகன் என நம்பப்படும் 13 வயத் சிறுவனைக் கொடூரமாகத் தாக்கி சிற்றவதைச் செய்த 54 வயது உள்ளூர் பெண்ணுக்கு KUALA SELANGOR Sesyen நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 4 மாதங்கள் 40 மணிநேரம் சமூகச் சேவையில் ஈடுபடும்படி உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் தற்போது சமூக நலத்துறையின் பாதுகாப்பில் இருப்பதாகவும் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
முன்னதாக சமூக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனைக் கோலா சிலாங்கூரில் உள்ள Taman Bendahara குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கடந்த ஜூன் 29 சிறுவனைத் தாக்கியதாக நம்பப்படும் 54 வயது உள்ளூர் பெண் கைது செய்யப்பட்டார். 13 வயது சிறுவனின் உடலில் பல கத்திக் குத்து காயங்களும் தலை கன்னங்களில் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 54 வயது உள்ளூர் பெண் தன் மீதானக் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறையிலிருந்து வெளியேறியதும் 4 மாதங்கள் சமூகநலத்துறையில் சமூகச் சேவைகளில் ஈடுபடவும் KUALA SELANGOR Sesyen நீதிமன்ற நீதிபதி Nurul Mardhiah Mohammed Redza உத்தரவிட்டார்.
Seorang wanita tempatan berusia 54 tahun dijatuhkan hukuman penjara 8 tahun dan 40 jam khidmat masyarakat kerana mendera anak angkatnya berusia 13 tahun dengan kejam. Mangsa kini di bawah jagaan Jabatan Kebajikan Masyarakat dan menerima rawatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *