காலஞ்சென்ற முனைவர் சரவணன் P.வீரமுத்துவின் இறுதிப் படைப்புகள் வெளியீடு கண்டன!
- Thina S
- 13 Nov, 2024
மலாய் எழுத்துலகில் ஆளுமையும், தனக்கென தனித்திறனும் கொண்டவர் காலஞ்சென்ற முனைவர் சரவணன் P.வீரமுத்து அவர்கள். மலாய் இலக்கியத்திற்கு முனைவர் சரவணன் அவர்கள் ஆற்றிய பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் அவரது மூன்று மலாய் இலக்கிய நூல்களின் வெளியீடு கடந்த சனிக்கிழமை (9 நவம்பர் 2024) பினாங்கு கோல்ஃப் கிளப்பில் சிறப்பாக நடந்தேறியது.
முனைவர் சரவணனின் எழுத்துப் படிவங்களான ‘Himpunan
Puisi’, ‘Citra Identiti Kaum India’, ‘Devi’ ஆகிய நூல்களோடு,
முனைவர் சரவணன் அவருடனான நினைவுகள் குறித்த கவிதைத் தொகுப்பு நூலினை
Persatuan Karyawan Pulau Pinang இயக்கத்தினரின் தொகுத்து
வெளியீடு செய்து அவருக்குரிய மரியாதையைச் செலுத்தினர்.
“சரவணனின் இறுதிப் படைப்புகளின்
தொகுப்புகள் சமூகம், கலாச்சாரம், மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பான அவரது அனுபவங்களையும் சிந்தனைகளையும்,
அவரது எழுத்துக்கள் மூலம் இளைய தலைமுறையினருக்குக் கடத்துவதில் அவர்
கொண்டிருந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறினார். மேலும், மலாய்க்காரர் அல்லாதவர்களும் மலாய் மொழி, மலாய்
இலக்கியத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதை முனைவர் சரவணன் அவர்கள்
நிரூபித்துக் காட்டியுள்ளார்’ என பினாங்கு பணியாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ
டாக்டர் சுஹைமி அப்துல் அசிஸ் புகழாரம் சூட்டினார்.
கணவரின் இறப்புக்குப் பின்னர்,
அவரது படைப்புகள் வெளிவரவும், அவருடைய மலாய்
மொழிப்புலமையை அனைவரும் அறியவும், அவரது படைப்புகள் இளைய
சமுதாயத்திற்கும் மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல
சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலத்தில் நூல் தொகுப்புப்
பணியை நிறைவு செய்து வெளியீடு செய்த முனைவர் சரவணன் அவர்களின் துணைவியார் முனைவர்
மனோன்மணி தேவி அண்ணாமலை அவர்களின் முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியதாகும். வெளியீட்டிற்குப்
பின்னர், முனைவர் சரவணனின் மாணவர்களுக்கும், தமது மாணவர்களுக்கும் நூல்களை அவர் இலவயமாக வழங்கினார்.
Persatuan Karyawan Pulau Pinang dan keluarga mendiang Dr. Saravanan Veeramuthu menganjurkan majlis penghormatan memperkenalkan tiga karya terakhir beliau. Mendiang dikenang sebagai pendidik dan penulis berdedikasi, menyumbang besar kepada pendidikan serta penulisan
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *