உலக மக்களை நெகிழ்ச்சி அடைய செய்த "கருணை கொலை"!

top-news
FREE WEBSITE AD

நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தன்னுடைய மனைவியுடன் கருணை கொலை செய்து கொண்ட சம்பவம் உலக மக்களை நெகிழச் செய்துள்ளது.
1931 ஆம் ஆண்டு பிறந்த ட்ரைஸ் வேன் ஆக்ட் 1977 முதல் 1982 ஆம் ஆண்டு வரை நெதர்லாந்து நாட்டின் பிரதமராக இருந்தார். இவருடைய மனைவியின் பெயர் இகுனி.

ட்ரைஸ் வேன் ஆக்ட் தன்னுடைய பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நல்ல மனிதர் ஆவார். பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் நல்ல மனிதராகவும், நல்ல ஒரு கணவராகவும் வாழ்ந்து வந்த ரைஸ் வேன் ஆக்டிக்கு 2019 ஆம் ஆண்டு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது.

இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மன வேதனையுடன் பல நாட்கள் இருந்த அவரது மனைவி இகுனி, நாங்கள் 70 வருடமாக இணை பிரியாத நல்ல ஒரு தம்பதியினராக வாழ்ந்து வந்ததாகவும், ஒருவரை விட்டு ஒருவர் இல்லாமல் எங்களால் வாழ முடியாது... ஆகவே எங்கள் இருவரையும் கருணைக்கொலைக்கு அனுமதிக்குமாறு நெதர்லாந்து அரசிடம் அனுமதி கோரினார். இகுனி அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நெதர்லாந்து அரசாங்கம் அவர்களுக்கு முறையாக கருணைக்கொலை வழங்குமாறு அனுமதி கொடுத்தது.

பின்னர் தனது கணவரின் சொந்த ஊரான நெதர்லாந்தில் உள்ள நிஜ்மேகனில் 94 வயதான ட்ரைஸ் வேன் ஆக்ட் மற்றும் 93 வயதான அவரது மனைவி இகுனி இருவரும் தங்களின் கைகளை ஒருவருக்கு ஒருவர் கோர்த்தபடி தங்கள் உடம்பில் விஷ ஊசிகளை ஏற்ற சொல்லி கருணை கொலை செய்து கொண்டதை நெதர்லாந்து ஊடகங்கள் உறுதிபடுத்தின.
தங்களது நெருங்கிய குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்த பின்னரே இத்தகைய முடிவுகளை தாங்கள் எடுத்ததாக கருணை கொலைக்கு முன்பு இகுனி கூறியிருந்தார்.

2002 ஆம் ஆண்டு முதல் இது போன்ற கருணைக்கொலைக்கு நெதர்லாந்து அரசு முறையாக அனுமதி அளித்த நிலையில்
2020 ஆம் ஆண்டு 13 தம்பதிகளும்
2021 ஆம் ஆண்டு 16 தம்பதிகளும்
2022 ஆம் ஆண்டு 29 தம்பதிகளும்
இது போன்ற கருணைக்கொலையில் அரசு அனுமதியுடன் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை கருணை கொலைகள் நெதர்லாந்தில் அரங்கேறி இருந்தாலும் ட்ரைஸ் வேன் ஆக்ட் மற்றும் இகுனி தம்பதியினரின்  கருணை கொலை உலக மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் காதலர் தினம் வரும் பிப்ரவரி மாதம்  இவர்களது கருணை கொலை நடந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *