பயணங்களில் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுத்தும் மோஷன் சிக்னஸ் பற்றி தெரிந்து கொள்வோமா?

top-news
FREE WEBSITE AD

பொதுவாக நம்மில் பலருக்கும் பேருந்து, கார், விமானம் போன்றவற்றில் பயணம் செய்யும் பொழுது குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவது வழக்கம்.

இது மோஷன் சிக்னஸ் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் கண்கள் மூலமாக பார்க்கக்கூடிய காட்சிகளும் உங்கள் உட்புற காதுகள் உணரும் விஷயங்களும் வெவ்வேறாக இருக்கும் பொழுது இந்த மோஷன் சிக்னஸ் ஏற்படுகிறது. இதன் காரணமாக மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி வரலாம். ஒரு சிலருக்கு கார், ரயில், விமானம், படகு போன்றவற்றில் மோஷன் சிக்னஸ் வரலாம்.


இன்னும் சிலருக்கு பொழுதுபோக்கு விளையாட்டு பூங்காக்களில் உள்ள ரைடுகளில் செல்லும் பொழுது மோஷன் சிக்னஸ் ஏற்படும். மோஷன் சிக்னெஸ் நம்முடைய பயண அனுபவத்தையே மோசமாக்கிவிடும். ஆனால் இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. இதனை தவிர்ப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் பல்வேறு யுத்திகள் உள்ளன. மோஷன் சிக்னஸ் பிரச்சனையை தவிர்ப்பதற்கும் அல்லது அதன் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவக்கூடிய ஒரு சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

நீங்கள் பயணிக்கும் கார் அல்லது பேருந்தின் முன்புறத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.புகைப்பிடிப்பதை தவிர்த்து விடுங்கள். ஒரு குறுகிய நேரத்திற்கு புகைபிடிப்பதை நிறுத்தினால் கூட உங்களுக்கு மோஷன் சிக்னஸிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பாட்டு கேட்பது அல்லது உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எதையாவது செய்வது போன்ற உங்கள் கவனத்தை திசை திருப்பக் கூடிய விஷயங்களில் ஈடுபடுங்கள்.போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.மதுபானங்கள் மற்றும் காபின் கலந்த பானங்களை தவிர்த்து விடுவது நல்லது.வாய்ப்பிருந்தால் படுத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொண்டு தூங்கி விடுவது மோஷன் சிக்னஸ் பிரச்சனையை குறைப்பதற்கு உதவும்.

இவற்றை முயற்சி செய்து பார்த்தும் கூட உங்களால் வாந்தி மற்றும் குமட்டலை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பயணத்திற்கு முன்பே மருத்துவரை அணுகி மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு பயணம் மேற்கொள்வதற்கு 1/2 மணி நேரம் முன்னர் மருந்துகளை எடுக்க வேண்டும்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *