மலேசிய இராணுவ PhD (Chemistry - Nanotechnology) துறையில் முனைவர் பட்டம் பெற்ற லெவ்டனன் தட்சணாதரன் நாகராஜன்.
- Muthu Kumar
- 13 Oct, 2024
லெவ்டனன் தட்சணாதரன் நாகராஜன் மலேசிய இராணுவ PhD (Chemistry - Nanotechnology) துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.இதே பல்கலைக்கழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் முடித்த பின் அந்த ஆண்டின் சிறந்த மாணவர்க்கான தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து இதே பல்கலைக்கழகத்தின் 2021 இல் மாஸ்டர்(முதுகலை) பட்டம் பெற்று அவ்வாண்டின் மாஸ்டர் பட்டம் பெற்ற மாணவர்கள் மத்தியில் மிகச் சிறந்த மாணவராக தேர்வு பெற்று மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும், இவருடைய முனைவர் பட்டத்திற்கு இரண்டு முறை அனைத்துலக அறிவியல் கண்டு பிடிப்பிற்காக இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.முனைவர் பட்டத்திற்கு 2024 இல் குறைந்தது 2 அறிவியல் ஆராய்ச்சி தாள்கள் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், டாக்டர் தட்சணாதரன் 21 ஆராய்ச்சி தாள்கள் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவரை இராணுவ பல்கலைக் கழகத்தின் வரலாற்றில் இளங்கலை, முதுகலை மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பிற்கு மொத்தம் 4 தங்கப் பதக்கங்கள் பெற்ற முதல் இந்திய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய அபார வெற்றிக்கு அவருடைய மனைவி டாக்டர் ஸ்ரீ சவிதா ரூபினி பெரும் பங்காற்றியுள்ளார் என்று தட்சணாதரன் தெரிவித்தார்.தமது அறிவியல் துறையில் கவனம் செலுத்தி வருவதோடு நெகிரி செம்பிலான் சமூகம், கலை, கலாச்சாரம்,நன்னெறி இயக்கமான “மைகல்சர்” இயக்கத்திற்கு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பல தன்முனைப்பு சொற்பொழிவுகள் ஆற்றி இந்திய இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதோடு இளமைக் காலத்திலேயே முனைவர் பட்டம் பெற்றிருக்கும் டாக்டர் தட்சணாதரன் நம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார் என்று “மைகல்சர்” தலைவர் “சங்கரத்னா” டாக்டர் வே.கந்தசாமி தெரிவித்தார்.
டாக்டர் தட்சணாதரன் அனைத்துலக இந்து சபா,மலேசிய கிளைக்கு இளைஞர் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *