ரிம்பா கன்ச்சிங் நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த நியூசிலாந்து பெண் காயம்!

- Muthu Kumar
- 29 Jun, 2025
ரவாங், ஜூன் 29-
ரிம்பா கன்ச்சிங் நீர்வீழ்ச்சியின் 6 மீட்டர் உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததாக நம்பப்படும் நியூசிலாந்து பெண்ணொருவர் காயமுற்றார்.இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 11.52 மணிக்கு அவசர அழைப்பு பெறப்பட்டதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவுத் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
ரவாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 8 தீயணைப்பு வீரர்கள் 1 தீயணைப்பு இயந்திரத்தில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு நண்பகல் 12.10 மணிக்குச் சென்றடைந்ததும் 6 மீட்டர் உயரம் கொண்ட நீர்வீழ்ச்சியிலிருந்து 52 வயதுடைய நியூசிலாந்து பெண் தவறி கீழே விழுந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு இடது கை, இடது கால், முதுகெலும்பு ஆகியவற்றில் காயமேற்பட்டது. இருந்த போதிலும் அவர் சுய நினைவில்தான் இருந்தார் என்று ஓர் அறிக்கையில் அகமட் முக்லிஸ் முக்தார் குறிப்பிட்டார்.
Seorang wanita New Zealand berusia 52 tahun cedera selepas terjatuh dari air terjun setinggi 6 meter di Rimba Kancing, Rawang. Beliau mengalami kecederaan pada tangan, kaki dan tulang belakang, namun masih sedar ketika diselamatkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *