செவ்வாய் : 13 மே, 2025
8 : 24 : 10 PM
முக்கிய செய்தி

பக்காத்தான் மீது ஐசெக கவனம் தேமுவுடன் பிரச்சினை ஏதுமில்லை- லோக்!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், மார்ச் 17-

கட்சி மற்றும் தனது கூட்டணிப் பங்காளிகள் மீது கவனம் செலுத்தும் நோக்கத்தை, ஜசெகவின் 18ஆவது பொதுப் பேரவை கொண்டிருப்பதன் காரணத்தினால், அப்பொதுப் பேரவைக்கு பக்காத்தன் ஹராப்பான் தலைவர்களுக்கு மட்டுமே ஜசெக அழைப்பு விடுத்திருந்தது என்று. அதன் தலைமைச் செலயாளர் லோக் சியூ ஃபூக் விளக்கமளித்துள்ளார்.

அதேவேளையில், ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் தேசிய முன்னணி போன்ற தனது பங்காளிக் கட்சிகளுடன் ஜசெகவுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்."சில சமயம், ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் இதர கட்சிகளின் தலைவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.

தனது மாநாட்டிற்கு தனது சொந்த உறுப்புக் கட்சிகளை மட்டுமே தேசிய முன்னணி அழைத்தால், அதில் பிரச்சினை ஏதுமில்லை" என்று, சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள ஐடியல் மாநாட்டு மையத்தில் நேற்று நடந்த ஜசெக பொதுப் பேரவையில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, போக்குவரத்து அமைச்சருமான லோக் தெரிவித்தார்.

இப்பொதுப் பேரவையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அதன் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நகத்தியோன் இஸ்மாயிலும் அக்கூட்டணி சார்பில் கலந்து கொண்டனர்.அமானா கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோரும் இதில் கலந்து கொண்ட வேளையில், தேசிய முன்னணி, காபுங்கான் பார்டி சரவாக் அல்லது காடங்கான் ரக்யாட் சபா ஆகிய கூட்டணித் தலைவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

Setiausaha Agung DAP, Loke Siew Fook, menjelaskan hanya pemimpin Pakatan Harapan dijemput ke Perhimpunan Agung ke-18 DAP kerana fokusnya adalah pada parti dan sekutu rapatnya. Beliau menegaskan tiada isu dengan parti dalam kerajaan perpaduan, termasuk Barisan Nasional.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *