மனித எலும்புகளின் வழி போதை பொருளா?

- Muthu Kumar
- 26 Jun, 2024
மனித கல்லறையில் உள்ள உடல்களைத் தோண்டி எடுத்து மனித எலும்பினால் உருவாக்கப்படும் போதைப் பொருளுக்கு அடிமையாகும் ஆப்பிரிக்க இளைஞர்கள்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் 'குஷ்' என்ற ஒரு ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த 'குஷ்' போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த 'குஷ்' ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறைகளை தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து 'குஷ்' போதைப்பொருளைத் தயார் செய்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எலும்புகளுடன் ஃபெண்டானில், கஞ்சா மற்றும் சில ரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுவதாகவும், இதற்காக சியரா லியோனில் இதுவரை மனித எலும்புக்கூடுகளுக்காக நூற்றுக்கணக்கான கல்லறைகள் தோண்டப்பட்டுள்ளதாகவும் இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. இதன் விலை மிகவும் குறைவாக இருப்பதினால் நாளுக்கு நாள் இளைஞர்கள் இது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர் என்று அந்நாட்டு அறிக்கை ஒன்று கூறுகிறது.
மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களான புத்தகங்கள் மற்றும் ஆடைகளை விற்று அந்த குஷ் ரக போதை பொருளை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஷ் ரக போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும், அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *