40 வயதை நாம் தொட்டு விட்டால்- நம் உடல் பற்றி கவனிக்கப்பட வேண்டியவை!
- Muthu Kumar
- 16 Sep, 2024
40 வயதை நெருங்கிவிட்டீர்கள் என்றால் நீங்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள். 40 வயதுக்குப் பின்னர் உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.ஆகவே நீங்கள் சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களுக்கு மாறிக்கொள்ளவேண்டும். அத உங்களின் முதுமை தோற்றத்தை குறைக்க உதவும். ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதுகாக்கும். 40க்கு பின்னர் மேலும் வயது அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
உடற்பயிற்சி
உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறவும், இதய ஆரோக்கியத்துக்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஆனால் நீங்கள் 40 வயதுக்கு பின்னர் போதிய உடற்பயிற்சி செய்யவில்லையென்றால் அது உங்கள் உடல் எடை அதிகரிக்க உதவும். உடலில் நெகிழ்தன்மையைக் குறைக்கும். நாள்பட நாள்படநோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.
கடினமான பயிற்சிகளை தவிர்த்தல்
தசையிழப்பைக் தடுக்க சில பயிற்சிகள் உடலுக்கு மிகவும் அவசியம். எனவே உங்களுக்கு உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் தேவை. இதனால் உங்கள் உடலில் சமமின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம். எனவே எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்வது மிகவும் அவசியம்.
போதிய உறக்கமின்மை
நீங்கள் மீண்டெழவும், உங்கள் மூளை சிறப்பாக செயல்படவும், ஆரோக்கியத்துக்கும் உறக்கம் மிகவும் அவசியம். போதிய உறக்கமின்மை உங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கும். மனஅமைதியைக் குறைக்கும். எனவே தினமும் இரவில் கட்டாயம் 7 முதல் 9 மணி நேர உறக்கம் தேவை.
பதப்படுத்தப்பட்ட உணவு
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உங்களின் உடல் எடை அதிகரிக்கவும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு ஆரோக்கிய கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், முழு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், புரதங்கள், தானியங்களை எடுக்கவேண்டியது அவசியம். இவைதான் உங்கள் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சி மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
மன ஆரோக்கியம்
ஒருவரின் மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது நல்லதல்ல. உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டும் நீங்கள் நல்வாழ்வு வாழ்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் நீங்கள் அதிகளவு மனஅழுத்தத்தில் தளராமல் தவிர்க்கிறது. முதுமை தொடர்புடைய வாழ்வியல் மாற்றங்களையும் அது தவிர்க்கும். மன ஆரோக்கியத்தை தவிர்த்தால் அது பயம், பதற்றம் மற்றும் மனஅழுத்தம் என கொண்டு செல்லும்.
புகையிலை நுகர்வு
பல்வேறு கடும் வியாதிகளுக்கு புகையிலை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. இதனால் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படும். எனவே புகையிலை பயன்பாட்டை கட்டாயம் 40களுக்குப்பின்னர் கட்டுப்படுத்தவேண்டும். இதனால் ஏற்படும் நோய் தடுக்கப்படுகிறது.
பரிசோதனைகள்
நீங்கள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் போனால், அது உங்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். வயது அதிகரிக்கும்போது உங்களுக்கு உடற் பரிசோதனைகள் அவசியம். இதை தவிர்த்தால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள வியாதியை நீங்கள் முன்னரே சோதிக்காமல் விட்டுவிட்டு, அது முற்றியபின் முட்டிக்கொண்டு இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.
போதிய அளவு தண்ணீர்
40 வயதுகளுக்குப் பின்னர் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். எனவே உங்களுக்கு முறையான நீர்ச்சத்து தேவை. செரிமானம், ரத்த ஓட்டம் மற்றும் உடல் சூடு ஆகியவற்றை தவிர்க்க உங்களுக்கு போதிய நீர்ச்சத்து தேவை. நாள் முழுவதும் நீங்கள் அதிகளவு தண்ணீர் பருகவேண்டும் என்பது முக்கியம். அது உங்களுக்கு போதியளவு தண்ணீர் சத்து கிடைக்கச் செய்வதுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
சமூக தொடர்பு
40 வயதுக்கு மேல் சமூகத்துடன் உரையாடுவது உங்களின் உணர்வுநலன்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதற்கு ஆரோக்கியமான சமூகம் கட்டாயம் வேண்டும். நச்சு சமுதாயத்தில் நாம் எந்த காலத்திலும் உரையாடாமல் இருப்பது நல்லது. எனவே உங்களைச் சுற்றி நேர்மறை மனிதர்களை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சமூகத்துடன் தொடர்பில் இருக்கும்போதுதான் உங்கள் நினைவாற்றல் திறன் அதிகரிக்கிறது. அது குறைந்தால், தனிமை உணர்வு ஏற்பட்டு அது உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.
அமரும் நிலை
நீங்கள் அமர்ந்து பணிபுரிபவர் என்றால் சரியான நிலையில் அமர்வதை எப்போதும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்ககுக்கு முதுகு வலி, மூட்டு வலி, நடக்கும்போது தடுமாற்றம் ஆகியவை ஏற்படும். எனவே நீங்கள் அமரும் நிலையில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். இது உங்கள் உடலில் அழுத்தத்தை குறைக்கும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை குலைக்க உதவும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *