சம்மன்கள் செலுத்தவில்லையென்றால் சாலையில் பயணிக்கத் தடை!

- Shan Siva
- 01 Jul, 2025
கோத்தா பாரு, ஜூலை 1: ஜூலை 8 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகு, நிலுவையில் உள்ள சம்மன்களை செலுத்தத் தவறும் விரைவுப் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மீது சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) நடவடிக்கை எடுக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு நிலுவையில் உள்ள சம்மன்களை கொண்டுள்ள வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் சாலையில் பயணிக்கத் தடை விதிக்கப்படும் என JPJ தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ராம்லி தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இது குறித்து அறிவித்த பிறகு, இதுவரை, பல நிறுவன ஆபரேட்டர்கள் சம்மன்களை செலுத்த முன்வரத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
JPJ akan mengambil tindakan terhadap bas ekspres dan lori yang gagal bayar saman selepas 8 Julai. Kenderaan terbabit akan disenarai hitam dan dilarang di jalan raya. Banyak pengusaha telah mula melunaskan saman selepas pengumuman menteri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *