பேருந்தில் பாதுகாப்பு வார்ப்பட்டை பிரச்சினையாக இருந்தால் மைஜேபிஜேயில் புகார் செய்யலாம்!

- Muthu Kumar
- 04 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 4-
பாதுகாப்பு வார்ப்பட்டை சரியாக இயங்காமல் அல்லது பிரச்சினை கொண்டதாக இருந்தால் விரைவுப் பேருந்து அல்லது சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள் மைஜேபிஜே வாயிலாகப் புகார் செய்யலாம்.அந்த புகாரை மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்கலாம். எனினும், விசாரணையை எளிதாக்கும் வகையில் புகைப்படம் அல்லது காணொளி மற்றும் பேருந்து பயண விவரங்களையும் இணைக்க வேண்டும் என்று கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்தார்.
பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு வார்ப்பட்டையை அணியச் சொல்லி பயணிகளுக்குப் பேருந்து ஓட்டுநர்கள் நினைவுறுத்த வேண்டும்.
இதன் முக்கிய நோக்கம் பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிலையை உயர்த்தி கடுமையான காயம் அல்லது மரணத்திற்கான ஆபத்துகளை விரைவுப் பேருந்து சம்பந்தப்பட்ட விபத்துகளில் குறைக்க வேண்டும் என்பதற்காகும் என்று கோம்பாக் டோல் சாவடியில் விரைவுப் பேருந்து மற்றும் சுற்றுலா பேருந்துகளுக்கான பாதுகாப்பு வார்ப்பட்டை அணிவிக்கும் சிறப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய போது ஹமிடி அடாம் குறிப்பிட்டார்.
JPJ menggalakkan pemandu bas ekspres dan pelancongan melaporkan masalah tali pinggang keselamatan melalui MyJPJ atau e-mel, disertakan bukti. Pemandu wajib ingatkan penumpang memakainya sebelum perjalanan, demi keselamatan dan mengurangkan risiko kemalangan serius.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *