பினாங்கு பாலத்திலிருந்து குதித்தவர் பிணமாக மீட்கப்பட்டார்!

- Shan Siva
- 02 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 2: இன்று அதிகாலை பினாங்கு இரண்டாவது பாலத்தில்
இருந்து ஒருவர் விழுந்துவிட்டதாக நம்பப்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
பாலத்தின் 14 கி.மீ. தொலைவில் பிரதான நிலப்பகுதியை நோக்கிச்
செல்லும் அந்த நபரின் கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
மலேசிய கடல்சார்
அமலாக்க நிறுவனத்திடமிருந்து (MMEA) அதிகாலை 4.30 மணியளவில்
துறைக்கு அழைப்பு வந்ததாகவும், பாயான் பாரு
மற்றும் பாகான் ஜெர்மல் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் அடங்கிய குழு
சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், 33 வயதுடைய நபரின்
உடல் பிற்பகல் 1.55 மணிக்கு
கண்டுபிடிக்கப்பட்டதாக ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
கடல் காவல் துறை
ஜெட்டியில் இருந்து சுமார் 200 மீ தொலைவில் ஒரு
மீனவரால் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் ஜெட்டிக்கு கொண்டு வரப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Seorang lelaki dipercayai terjun dari Jambatan Kedua Pulau Pinang awal pagi ini. Operasi mencari dan menyelamat dimulakan dan mayatnya ditemui oleh nelayan sekitar 200 meter dari jeti laut, sebelum diserahkan kepada polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *