பொக்கிஷமாய் பாதுகாக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய கார்!

top-news
FREE WEBSITE AD

எத்தனையோ புது, புது நவீன கார்கள் வந்தாலும், பழமையான கிளாசிக் கார்கள் என்றாலே ஒருவித ஈர்ப்பு நம் அனைவருக்குமே உண்டு. 80, 90 வருடங்களுக்கு முன்பே உள்ள  கிளாசிக் கார்களுக்கே இப்படி என்றால், மகாத்மா காந்தியடிகள்  பயன்படுத்திய கார்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதனால்தான் அத்தகைய கார்கள் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன 

இந்திய சுதந்திரத்திற்கு போராடியவர்களில் முக்கியமானவர் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய வலுவான இந்திய அரசாங்கம் அமைவதற்கு அடித்தளமிட்டவர் மகாத்மா காந்தி ஆவார். 

மகாத்மா காந்தி அவர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தில் அவரது எளிமையான வாழ்வியலுக்காகவும்,  அவர் எடுத்த முடிவுகளுக்காகவும் மக்கள் நிறைய பேர் காந்தியடிகளை பின்பற்றினார்கள். 

பல செல்வந்தர்கள் மற்றும் காந்தியடிகளை பின்பற்றுபவர்கள் தாமாக முன்வந்து தங்களது கார்களை மகாத்மா காந்தியின் போக்குவரத்துக்காக வழங்கியுள்ளனர். அவ்வாறு, அந்த சமயத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்கள் யாவும் இப்போது அருங்காட்சியகங்களில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், கர்நாடகா மாநிலம் மைசூருக்கு ஒருமுறை சென்ற மகாத்மா காந்தி அவர்கள் ஸ்டூட்பேக்கர் பிரெசிடெண்ட் 8 (Studebaker President 8) என்கிற காரை பயன்படுத்தினார். 

காந்தி மைசூர் வருகையின் போது பயன்படுத்திய Studebaker பிரசிடெண்ட் 8 கார் மிகப் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தது. இந்த கார் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு கப்பல் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது, மேலும் இது 5.5 லிட்டர் இன்லைன் 8 சிலிண்டர் எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. 

மைசூருக்கு அருகே உள்ள பயானா கார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த காரை இப்போதும் உங்களால் நேரில் பார்க்க முடியும். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *