அறிவிக்கப்பட்ட தார் சாலை நிர்மாணிப்பு எப்பொழுது தொடங்கப்படும்?பொதுமக்கள் கேள்வி!

top-news
FREE WEBSITE AD

(வி.இராஜேந்திரன்)

பகாவ், ஜூலை 1-

சுங்கை செபாலிங் தோட்டத்திலிருந்து பகாவ் வரையில் தார் சாலை நிர்மாணிக்கப்படும் என்று 2022இல் அறிவிக்கப்பட்டு சாலை மேம்பாட்டாளரின் அறிவிப்புப் பலகையும் இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகாறும் இதற்கான நடவடிக்கையும் பணிகளும் தொடங்கப்படாமல் இருப்பதன் காரணம் என்ன என்று வட்டார பொது மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜெம்போல் மாவட்ட பொதுப்பணி இலாகா இதற்கான பணிகளை முன்னெடுத்து செயல்படுத்தும் என்று கடந்த 25.10.2022ல் அறிவிப்பு பலகையில் அறிவிக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகள் ஆகியும் இந்த புதிய தார் சாலை நிர்மாணிப்பு வருவதற்கான தடயம் ஏதும் இதுநாள்வரை தெரியவில்லையென பலர்  புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அறிவிப்புப் பலகை பொருத்தப்பட்ட இந்த இடத்தில் தார் சாலை வருமா? இல்லை அறிவிப்போடு நின்று விடுமா? என்ற கேள்விக்கணைகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.நெகிரி செம்பிலான் மாநில அரசு செயலகத்தின் அதிகாரிகள் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இதற்கான தீர்வையும் முறையான நடவடிக்கையும் எடுக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Penduduk mempersoalkan kelewatan pembinaan jalan tar dari Sungai Sepaling ke Bahau yang diumumkan sejak 2022. Walaupun papan tanda projek telah dipasang, kerja masih belum bermula. Mereka menggesa kerajaan negeri ambil tindakan segera.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *