தாதியர் வேலை இருக்கிறது ஆனால் யாரும் அதற்கு விண்ணப்பிப்பதில்லை - அமைச்சர் சுல்கீப்ளி!

- Muthu Kumar
- 30 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 30-
காலியாக இருக்கும் தாதியர் வேலைக்கு யாரும் விண்ணப்பம் செய்யாததால், பொதுச் சேவைத் துறை குறிப்பாக சுகாதாரத் துறையில் தாதியர்கள் பற்றாக்குறை நிலை மோசமடைந்து வருவதாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கீப்ளி அஹ்மாட் கூறியுள்ளார்.
இலக்கவியலோடு ஒப்பிடும்போது, சுகாதார அமைச்சில் தற்போது தாதியர் பற்றாக்குறை முக்கிய விவகாரமாக ஆகியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்."நாங்களும் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு விட்டோம்.பயிற்சி தாதியர்களின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்கச் செய்வதும் அதில் அடங்கும். ஆனால், அப்பற்றாக்குறையை இன்னமும் நிரப்ப முடியவில்லை.
"தாதியர் வேலை இருக்கிறது. ஆனால், அதை யாரும் விரும்பவில்லை. அதனால், போதுமான தாதியர்களைக் கொண்டிருப்பதில் சுகாதார அமைச்சு சிரமத்தை எதிர்நோக்கி வருகிறது.“அதனால், இந்த தாதியர் பற்றாக்குறை பிரச்சினையை களையச் செய்ய சுகாதார அமைச்சுக்கு சிறிது காலஅவகாசம் கொடுங்கள்"என்று ஜொகூர், பாசிர் கூடாங்கில் சுல்கீப்ளி கூறியதாக பெரித்தா ஹரியான் நேற்று செய்தி வெளியிட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2023ஆம் ஆண்டுக்கிடையில், மொத்தம் 6,919 சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் வேலைகளை ராஜினாமா செய்து விட்டு தனியார் துறைக்குச் சென்று விட்டதாக கூறப்பட்டது.நிரந்தரமாக நியமிக்கப்பட்ட 1,754 தாதியர்களும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 387 தாதியர்களுமாக மொத்தம் 2,141 தாதியர்கள், 2022ஆம்
ஆண்டிலிருந்து கடந்த 203 ஆம் ஆன்டுக்கிடையில் தங்களின் வேலையை ராஜினாமா செய்திருப்பதாக பதிவுகள் காட்டுவதாக சுல்கீப்ளி தெரிவித்தார்.
தாதியர்கள் தனியார் துறைகளுக்குச் சென்றால் அதிக அளவிலான சலுகைகள் வழங்கப்படுவதும் இந்நிலைக்கு காரணம் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
எனினும், தாதியர் பற்றாக்குறை நிலை நீடிக்கப்படுவதை தவிர்க்கும் முயற்சியாக, சுகாதார அமைச்சு தற்போது பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருவதாக சுல்கீப்ளி தெரிவித்தார்.
Kekurangan jururawat semakin serius apabila tiada permohonan bagi jawatan kosong. Menteri Kesihatan menyatakan ramai berhenti kerja dan memilih sektor swasta kerana tawaran lebih baik. Pelbagai langkah diambil, namun kekosongan masih belum dapat diisi sepenuhnya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *