Google என்ற சொல் உருவான கதை!

top-news
FREE WEBSITE AD

டிஜிட்டல் உலகில் ஏதாவது தேட நினைத்தால், முதலில் நினைவுக்கு வருவது கூகுள் தான். எந்த ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல் ஆக இருந்தாலும் சரி அதில் இருக்கும் டீஃபால்ட் சர்ச் இன்ஜின் கூகுள். 

ஆனால், இந்த பிரபலமான பெயர் எப்படி உருவானது? கணிதத்தின் ஆழத்தோடு, சில தற்செயலான தவறுகளும் இதன் பின்னணியில் உள்ளது. கூகுள் என்ற பெயர் எப்படி தோன்றியது என்ற சுவாரஸ்யக் கதையைப் பற்றி பார்க்கலாம். 

உலகின் மிகவும் பிரபலமான சர்ச் இன்ஜின்களில் ஒன்றான கூகுள், உலகெங்கிலும் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில் பலருக்கும் இருக்கும் சந்தேகம் என்னவென்றால் கூகுள் என்ற பெயர் எப்படி வந்தது என்பதுதான். 

சமீபத்தில், கூகுள் என்பது ஒரு சுருக்கெழுத்தா என்ற கேள்வி குவேரா (Quora) பதிவில் எழுந்தது.குவேரா என்பது ஒரு இணையதளம் ஆகும். தங்களுக்குத் தெரியாத கேள்விகளை யார் வேண்டுமானாலும் அதில் கேட்கலாம். அதற்கு அந்த பிளாட்பார்மில் உள்ளவர்கள், பதில் அளிப்பார்கள். அதில் தான் கூகுள் என்பது சுருக்கெழுத்தா என்ற கேள்வி எழுந்தது. 

சுருக்கெழுத்து என்றால் ஆங்கிலத்தில் "Acronym" என்று பொருள். Acronym என்பதை நம்மால் படிக்க முடியும். ஆனால் Abbreviation என்பதை படிக்க முடியாது.இந்நிலையில் Google என்பது சுருக்கெழுத்தா என்ற கேள்விக்கு சிலர் தவறாக "Global Organization of Oriented Group Language of Earth" என்ற பதிலைப் பரிந்துரைத்தனர். இதுவே இந்தக் கேள்வியின், உண்மையான விவரங்களைப் பற்றிப் பயனர்களை மேலும் ஆராய்ச்சி செய்யத் தூண்டியது.உண்மையில், "Google" என்ற பெயர் "Googol" என்ற கணிதத் தொடரின் மாற்றாகும். 

"Googol" என்பது 10 ஐ 100 தடவை பெருக்கினால் வரும் மிகப் பெரிய எண். இதைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள், 100 பூஜ்ஜியங்களைக் கொண்ட அவ்வளவு பெரிய எண் அது!

இந்தச் சொல் 1920 ஆம் ஆண்டில் அமெரிக்க கணிதவியலாளர் எட்வர்ட் காஸ்னரின் 9 வயதான மருமகன் மில்டன் சிரோட்டா என்பவரால் உருவாக்கப்பட்டது. காஸ்னர் தனது 1940 ஆம் ஆண்டு புத்தகமான "Mathematics and the Imagination" என்ற புத்தகத்தில் இந்த எண்ணை அடிக்கடி குறிப்பிட்டு எழுதிருப்பார். 

அவ்வளவு பெரிய தகவல்களைக் கையாளும் ஒரு தேடல் இயந்திரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான், 1998 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த செர்ஜி பிரின் மற்றும் பேஜ் ஆகியோர் கூகுள் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். 

பின்னர், நிறுவனத்திற்கு பெயர் சூட்டும் போது, "Googol" என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தார்கள். ஆனால், டொமைன் பெயர் (domain name) பதிவு செய்ய முயற்சித்த போது, அது ஏற்கனவே வேறு யாரோ எடுத்துவிட்டது போல் காண்பித்துள்ளது. அப்போது, அவர்களது நண்பர் ஒருவர் தவறாக "Google" என்று டைப் செய்தார். இந்த தவறான டைப்பிங்கைப் பார்த்த பேஜ், இந்த பெயரே சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்தார். இப்படித்தான், "Googol" என்ற பெயர் "Google" என்ற தவறான டைப்பிங்கின் விளைவாக வந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *