அரசாங்க மருத்துவமனைகளில் தாதியர் விவகாரத்திற்கு பொதுச்சேவைத்துறை பொறுப்பேற்க வேண்டும்-செனட்டர் லிங்கேஸ்வரன்!

- Muthu Kumar
- 03 Jul, 2025
(தி.ஆர்.மேத்தியூஸ்)
பட்டர்வொர்த், ஜூலை 3-
நாட்டின் பொதுச்சேவைத் துறையில் அமல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டங்களில் ஒன்றாக,வாரத்தில் 45 மணி நேர வேலை அமலாக்கம் கண்டால் மேலும் அதிகமான தாதியர்கள் தங்களின் வேலையை ராஜினாமா செய்து விட்டுச் செல்லக்கூடிய இக்கட்டான நிலைமை ஏற்படுமென செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர்.அருணாசலம் கூறினார்.
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து தாதியர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் என 6,900-க்கும் மேற்பட்டவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகுந்த கவலையையும், உண்மையான மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கும் என்றார்.
இப்படி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுகாதார நேர திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படுமேயானால் இன்னும் அதிகமான மருத்துவப் பணியாளர்கள் ராஜினாமா செய்வதோடு மட்டுமல்லாது நாட்டின் சுகாதார முறை அழிவை நோக்கி செல்லும் என்பதோடு,இந்த தோல்விக்கு பொதுச்சேவைத் துறையே முழுப்பொறுப்பேற்க வேண்டுமென கடும் எச்சரிக்கை விடுப்பதாக செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர்.அருணாசலம் வெளியிட்ட
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான தாதியர் சங்கங்கள் மற்றும் மலேசிய அமைப்பு முறையில், வேலை நேரத்தை வாரத்தில் 45 மணி நேரமாக பொதுச் சேவை துறை அதிகரித்தால் அதிக ஆபத்தான நிலையை உருவாக்கும் என கூறினார். இந்த வேலை அதிக ஆபத்தான நிலையை உருவாக்கும் என சொன்னார். இந்த வேலை .அது உணர்வில்லாத மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அமைப்புகளுடன் தாம் கொண்டுள்ள தொடர்பின்படி, எந்தவோர் இழப்பீடும் இல்லாதது,வேலைப்பளு மற்றும் சமூகநலன் விவகாரங்களுக்கு சுமுகமான தீர்வு காணப்படாதது போன்றவற்றை தாங்கிக் கொள்ள முடியவில்லையென பெரும்பாலோர் கூறுவதாக தெரிவித்தார்.
மருத்துவப் பணியாளர்கள் பெரும்பாலோர் கீழ்நிலையில் உள்ளவர்களாக இருப்பதால்,அன்றாடம் மக்களின் சுகாதார நலனுக்காக பாடுபடும் அவர்களின் வேலைப்பளுவை அதிகரிப்பதை தவிர்த்து, சேவைக்கான அங்கீகாரம், ஊதியம்,மற்றும்
ஊக்கத்தையும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பொது மருத்துவமனைகளின் சேவைத் தரம் செயலிழக்கும் வரையில் காத்துக் கொண்டிருப்பதும் பிறகு யார் மீது குற்றம் கண்டுபிடிப்பது என்பதும் தேவையற்றது. இதில் பொதுச்சேவைத் துறை தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் கருதக்கூடும் என கூறிய அவர்.இந்த விவகாரம் குறித்து அண்மையில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்லி அகமட் வெளியிட்டிருந்த கருத்தை தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
Senator Dr. Lingeswaran R. Arunasalam beri amaran kerja 45 jam seminggu bakal jejaskan sektor kesihatan, menyebabkan lebih ramai jururawat letak jawatan. Beliau minta kerajaan beri pengiktirafan, gaji, dan insentif, bukan tambah beban kerja petugas kesihatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *