இஸ்லாத்தை இழிவுப்படுத்தினால் குடியுரிமையை ரத்து செய்யுங்கள்! – பெரிக்காத்தான் வலுயுறுத்து!

- Sangeetha K Loganathan
- 09 Mar, 2025
மார்ச் 9,
மலேசியாவில் இஸ்லாத்தை இழிவுப்படுத்தினால் அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்கட்சி தலைவருமான Datuk Seri Hamzah Zainudin தெரிவித்துள்ளார். இஸ்லாத்தை அவமதிக்கும் நபர்கள் மலேசியர்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்றும் இஸ்லாத்தின் புனிதத்தைக் கேவலப்படுத்தும் அளவிற்குத் தைரியம் கொடுத்தது யார் என்றும் Datuk Seri Hamzah Zainudin கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாத்தைக் கேவலமாகப் பேசும் நபர்கள் தற்போது அதிகரித்துவிட்டதாகவும் அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் மலேசிய குடியுரிமை பெற்றவர் இஸ்லாத்தை இழிவுப்படுத்தினால் அவரின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என Datuk Seri Hamzah Zainudin அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
MP Perikatan Nasional dan Ketua Pembangkang Datuk Seri Hamzah Zainudin menggesa kerajaan untuk membatalkan kewarganegaraan individu yang menghina Islam di Malaysia. Beliau menegaskan bahawa tindakan terhadap pihak yang merendahkan kesucian Islam masih tidak mencukupi dan perlu diperketatkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *