சீனாவின் வியத்தகு "ஜியாயுகுவான் கோட்டை"!

top-news
FREE WEBSITE AD


மலைகள் தாண்டி, மேய்ச்சல் நிலங்கள் தாண்டி,பாலைவனங்கள் தாண்டி கட்டப்பட்ட உலகிலேயே மிக நீளமான சுவர் என அழைக்கப்படும் சீனப் பெருஞ்சுவரின் எல்லை முடியும் இடம் ஒரு கோட்டை.இந்த கோட்டை பிரம்மாண்டமாகவும், அற்புதமாகவும் இருக்குமாம்.600 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோட்டை  சீனாவில் ஜியாயுகுவான் நகருக்கு அருகில்  தனி இடத்தில் அமைந்துள்ளது.

ஜியாயுகுவான் கோட்டை என்றும் இந்த கோட்டையை அழைக்கிறார்கள்.36 அடி உயரம் கொண்ட மதிற்சுவர்கள் அமைக்கப்பட்டு, ஏராளமான வாட்ச் டவர் உருவாக்கப்பட்டு, மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பை மீறிதான் இந்த கோட்டையில் உள்ளே செல்ல முடியும்.அந்த அளவிற்கு மிக மிக  பாதுகாப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கோட்டையை மிங் வம்சாவளி மன்னன் உருவாக்கிய கதை ஆச்சரியமான, சுவாரசியமான ஒன்று.


அந்த காலகட்டத்தில் கட்டிடங்கள் கட்டும் திறமைசாலிகள்  ஆயிரக்கணக்கான பேர் இருந்தாலும், மிங் வம்சாவளி மன்னனுக்கு தேவைப்பட்டது சரியாக, துல்லியமாக, தரமாக  கட்டிடக்கலையில் கை தேர்ந்த ஒருவர். அப்படி மிங் மன்னன் ஒருவரை தேடிக் கொண்டிருந்தார்.அப்படி  கிடைத்த கட்டிடக்கலை நிபுணர் தான்  ஈஹேசன் . இவர் ஒரு கட்டிடம் கட்ட நினைத்தால் அதற்கு தேவைப்படும் செங்கற்களை கூடுதல் குறைவாக இல்லாமல் சரியாக கணித்து சொல்லி, தரமாகக் கட்டிக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர். இவர் புகழ் பற்றி சொன்னதும் ஆச்சரியப்பட்ட மிங் வம்சாவளி மன்னன் உடனே அவரை சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்கிறார்.


ஈஹெசன் அவர்கள் மிங் வம்சாவளி மன்னன் முன் வருகிறார். மன்னனோ நல்ல பாதுகாப்புடன், அழகுடன், பிரம்மாண்டமாக ஒரு கோட்டை கட்ட வேண்டும் அதற்கு எத்தனை செங்கற்கள் தேவைப்படும் என்று துல்லியமாக என்னிடம் சொல் என கேள்வி எழுப்புகிறார். இதைக் கேட்ட கட்டிடக்கலை நிபுணரான ஈஹேசன் சில நிமிடங்கள் கழித்து  கணக்குகள் போட்டுவிட்டு எனக்கு 99999 செங்கற்கல் தேவைப்படுவதாக கூறுகிறார். சொன்னதைக் கேட்ட மிங் வம்சாவளி மன்னனும், அவரைச் சுற்றி உள்ளவர்களும் ஈஹேசன் அவரைப் பார்த்து  சிரிக்கின்றனர். உடனே மன்னன் நீ சொன்னது போல 99999 செங்கற்கள் கொடுக்கிறேன். நான் கூறிய அழகான, பாதுகாப்பான, கோட்டை கட்ட முடியவில்லை என்றால் உன்னையும் உன்னுடைய வேலை ஆட்களையும் சிறை பிடித்து கொடுமையான வேலைகளை கொடுப்பேன் என்று  கூறுகிறார். அப்படி ஒரு வேளை சரியாக கோட்டையை கட்டி விட்டால் உனக்கு மிகப்பெரிய பரிசுகள் தருவேன் என்றும் கூறுகிறார்.

கோட்டை கட்டும் வேலை தொடங்குகிறது சில மாதங்கள் சென்ற பிறகு கோட்டை கட்டி முடிக்கும் தருவாயில் உள்ள பொழுது மிங் வம்சாவளி மன்னனும் கோட்டையின் மேற்பார்வையாளர்களும் வந்து கோட்டையை பார்க்கிறார்கள். அப்பொழுது மீதம் இரண்டு செங்கற்கள் அங்கு உள்ளது. அதில் ஒரு செங்கல் கோட்டை கட்டி முடிக்க தேவைப்படுகிறது.  ஒரு செங்கல் மீதம் உள்ளது. மிங் வம்சாவளி மன்னனும் மற்றவர்களும் சிரித்துக்கொண்டே ஈஹேசனை பார்த்து உன் கணக்கு தவறானது. ஒரு செங்கல் மீதம் உள்ளது. அதனால் நான் கூறிய படி உன்னையும் உன் வேலையாட்களையும்  சிறை பிடிக்க போகிறேன்  என்று கூற, உடனே ஈஹேசன் அரசே நான் இன்னும் கோட்டை கட்டி முடிக்கவில்லை என்று கூறுகிறார். கட்டிய கோட்டையின் மதிற்சுவரின் மேல் மீதமுள்ள ஒரு செங்கலை வைத்து விடுகிறான். வைத்துவிட்டு இது சாதாரண செங்கல் அல்ல,  இந்த கல் இருக்க வேண்டிய இடம் இதுதான். இந்த சுவரின் மேலே வைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லை என் அனுமதி இன்றி எடுத்தால் அழகான மொத்த கோட்டையும் இடிந்து விடும் என ஈஹேசன் கூறுகிறார்.

இதைக் கேட்ட மக்கள் அனைவரும் மன்னனும் பயந்து அதிர்ச்சி அடைகின்றனர். கட்டிடக்கலை நிபுணரான ஈஹேசன் அவர்களின் சாதுர்யமான செயல்பாடு மிங் வம்சாவளி மன்னனுக்கு மிகவும்  பிடித்துபோய் பல வெகுமதிகளை அள்ளித் தருகிறார்.இன்றும் அந்த ஒரு மதிற்சுவர் மேல் வைக்கப்பட்டுள்ள செங்கல் 600 வருடங்களை கடந்தும் யாரும் எடுக்காமல் வைத்த இடத்திலேயே  பாதுகாக்கப்பட்டு இது போன்ற வரலாற்று செய்திகள் மூலம் உலக மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *