இறப்புக்கு சென்றுவிட்டு வந்ததும் குளிப்பதற்கான காரணம் ஏன்?

- Muthu Kumar
- 03 Mar, 2025
மனிதன் இறந்த பிறகு உடலிலிருந்து சிறுநீர் தானாக வெளியேற என்ன காரணம்? அது போல் இறப்புக்கு போய்விட்டு வந்தவர்கள் குளிப்பதற்கான காரணம் என்ன என்பதை சிந்தனைப் பூங்காவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மல்டிபிளஸ் மருத்துவமனையில் ஒருவர் மரணம் அடைந்தால் அவருடைய ஸ்டமக் கிளின் கருவி மூலம் மலம் சிறுநீர் சளி போன்றவை உடனடியாக அகற்றப்பட்டு உடல் கழுவி தூய்மையாக்கப்பட்டு சில வசதியானவர்களுக்கு எம்பார்ம் முறையில் உடல் பாதுகாப்பாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் நடைமுறை உள்ளது.
எதுவும் இல்லாமல் ஏழையாக இறந்தவர்களுக்கு வயிற்றில் வாயில் மார்பில் இருக்கும் எச்சங்கள் வெளியே வழியத்தான் செய்யும். இதை பெரிதாக பேச ஒன்றும் இல்லை.அதனால் தான் வாய்க்கரிசியை வாயில் வைத்து திணிக்கிறார்கள் மூக்கில் பஞ்சை வைத்து அடைக்கிறார்கள் தலையில் துணியை கட்டு போல கட்டி வாயை மூடுகிறார்கள் .
இறந்த உடம்பில் மீதம் இருக்கும் மலமும் சிறுநீரும் வெளியேறுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை என்ன செய்ய.இதனால் தான் ஒரு இறப்பிற்குச் சென்றவர் வீட்டிற்கு வந்தவுடன் குளித்து நமது உடலை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்ல பழக்கத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்தார்கள். இன்று அவை காற்றோடு பறந்து விட்டது. அதனால்தான் இந்த காட்சிகளை நாம் பெரிது படுத்துகின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பும் துறப்பும்:
இந்த சிந்தனை பூங்காவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தொகுக்கப்பட்ட செய்தி. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ளுங்கள். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *